Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடுகளவு கிடைத்து கடலளவு புரிந்துகொண்டேன்.
#1
செந்தமிழ் இனத்திற்கு தேவையானது செங்குருதித்து}ய்மையல்ல செயலிற் தூய்மையேயாகும்.



<b>தமிழை மணந்த தவமுனிவர்</b>

தமிழர் மரபில் தோன்றி தமிழர் சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டும், தமிழர் வாழ்வை உருக்குலைப்பவர்களும் தமிழர் வாழ்விற்கு உலைவைப்பவர்களும் தமிழர்களாக,தமிழ்த்தலைவர்களாக வாழ்கின்ற இச்சூழ்நிலையில் நேபாள தேசத்து அமர்த்திய பார்ப்பன மரபிற் தோன்றி நற்றமிழையும் நன்நெறியாம் சிவநெறியையும் வாழ்வித்த போற்றுதற்குரிய பெருமைக்குரிய தவமுனிவர்.நால்வருள் நாவுக்கரசர் தவித்து மற்றைய மூவரும் பார்ப்பன மரபில் தோன்றியவர்கள். எனினும் அவர்கள் பார்ப்பனியத்தைப்பாடவில்லை. மாறாகப்பைந்தமிழின் பெருமையையும் எம்மைப்படைத்த இறைவனின் இன்னருளின் இயல்பையுமே பாடியுள்ளனர்.

பிற இனமரபில் தோன்றிய மாணிக்கவாசகர் தமிழோடு, தமிழர் வாழ்வோடு ஒன்றி ஒப்பற்ற இறவாப்புகழ் வாய்ந்த பக்தி இலக்கியங்களான திருவாசகத்தையும், திருக்கோவையையும் எமக்குத்ததந்தருளிதை எண்ணும்போது உள்ளம் உருகுகின்றனது. கண்களில் நீர் பெருகுகிறது. எங்கே எப்படி எவருக்கு குழந்தைகளாகப்பிறக்கின்றோம் என்பதல்ல முக்கியம். யாம் வாழ்கின்றோம் என்பதுதான் முக்கயம். உலகில் எப்படி வாழNவுண்டும் என்பதற்கு மாணிக்கவாசகர் வாழ்வு தலைசிறந்த எடுத்துக்காட்டு. [b]இன்று எம் செந்தமிழ் இனத்திற்கு தேவையானது செங்குருதித்து}ய்மையல்ல செயலிற் து}ய்மையேயாகும்.
ஞானசம்பந்தர் சுந்தரர் போன்று மாணிக்கவாசகரும் இவ்வுலகில் வாழ்ந்தது மிகக்குறுகிய காலமேயாகும். ஆம் 32 ஆண்டுகளோடு அவர் தன்வாழ்வை முடித்துக்கொண்டார். அவர் உடல் மறைந்து பல நு}ற்றாண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் அவரின் உயரனைய பக்தி இலக்கியங்கள் இறவாப்புகழ் எய்திவிட்டன. இதுவும் [b]யாம் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல முதன்மை வாய்ந்தது. யாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள்.



நன்றி தற்செயலாக எனக்கு கிடைக்கப்பெற்ற கிழிந்த ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தில் இருந்த தகவல்கள் இவை. புத்தகத்தின் பெயரை காணவில்லை. எதுவுமே கிடைக்கவில்லை. ஒரு இந்தியத்தமிழருடைய கடையில் கிடந்த பழைய புத்தகத்தினுள் இந்த விடயம் அடங்கிய தாள் கிடைக்கப்பெற்றது. தேடிக்கொண்டிருக்கிறேன் அந்த அரிய புத்தகத்தை இன்னும் புதையல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

[url]
www.paranee.yarl.net
[b] ?
Reply


Messages In This Thread
கடுகளவு கிடைத்து கடலள - by Paranee - 07-11-2004, 12:34 PM
[No subject] - by tamilini - 07-11-2004, 12:53 PM
[No subject] - by Paranee - 07-11-2004, 09:41 PM
[No subject] - by Paranee - 07-11-2004, 09:49 PM
[No subject] - by yarl - 07-11-2004, 10:12 PM
[No subject] - by shanmuhi - 07-11-2004, 10:34 PM
[No subject] - by Eelavan - 07-12-2004, 06:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)