07-10-2004, 01:54 PM
மட்டு - கொழும்பு சம்பவங்கள் சமாதான பேச்சுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்: போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர்
மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றன சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடுமென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன் புரு ஹொவ்டே தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதங்களிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கொள்ளுப்பிட்டி சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற சில மணிநேரத்தில் தாம் அக்கடிதங்களை எழுதியதாகத் தெரிவித்துள்ள ட்ரொன் புரு ஹொவ்டே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும், கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பாகவும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார்.
இதேவேளை, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன் புரு ஹொவ்டே சிறிலங்கா அரச தரப்பினருக்கு எழுதிய கடிதம், இலங்கைக்கான நோர்வேத் து}துவர் ஹான்ஸ் பிரஸ்கரைச் சந்தித்த அரசாங்கத்தின் சமாதானச் செயலாளர் ஜயந்த தனபாலவிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றெனத் தெரிவித்துள்ள சமாதான செயலக வட்டாரங்கள், சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகவும், ஹான்ஸ் பிரஸ்கரைச் சந்தித்த அரசாங்கத்தின் சமாதானச் செயலாளர் ஜயந்த தனபால கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் குரல்தரவல்ல அதிகாரி திஸா பெனபொகா தெரிவித்துள்ளார்.

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>