07-10-2004, 01:53 PM
தமிழர் விழாவில் கலந்து கொள்ள கனடாவிலிருந்து சென்ற தமிழர்களை அமெரிக்கா அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்
அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற தமிழர் விழாவில் கலந்து கொள்வதற்காக கனடாவில் இருந்து சென்ற ஈழத்தமிழர்கள் அமெரிக்கா-கனேடிய எல்லையில் வைத்து அமெரிக்கா அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் போல்ரிமோர் மாநிலத்தில் இம்மாதம் 2ம் திகதி ஆரம்பமாகி 5ம் திகதிவரை 17வது தமிழர் விழாவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. வழமைபோல் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காகச் சென்ற கனடியத் தமிழர்கள் பலரே இவ்வாறு எல்லையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் இவ்வாறு மீள அனுப்பப்பட்டமைக்கு தகுந்த காரணங்கள் அமெரிக்கா அதிகாரிகளினால் வழங்கப்படாத நிலையில் கனடிய மற்றும் அமெரிக்கத் தமிழ் அமைப்புக்கள் தமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் அண்மையில் வெளியிடப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கள் பொதுமக்களின் உரிமைகளை வலியுறுத்தியிருந்த போதிலும் அமெரிக்க அதிகாரிகளின் இந்நடவடிக்கை குறித்து கனடியத் தமிழர்கள் கடும் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பலர் நீண்ட காலமாக கனடாவில் வாழும் தமிழர்கள் என்பதும் அவர்கள் கனடியக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>