07-10-2004, 11:26 AM
பிரசங்கத்தில் கேட்டது
ஒரு கணவன் மனைவி... கணவன் எப்போதும் பெண்டாடி செயலில் குறை காண்பவன்;. ஒரு நாள் கணவன் முட்டை வாங்கி வந்தான். மனைவி கணவனுக்கு அதை அவித்து உணவுடன் பரிமாறினாள். கணவன் கோபத்துடன் இதை எதற்கு அவித்தாய் நான் பொரியல் செய்ய அல்லவா வாங்கி வந்தேன் என்றான். மனைவி எதுவும் சொல்லவில்லை அமைதியாக போய்விட்டாள். மறுபடி ஒரு நாள் அவன் முட்டை வாங்கி வந்தான். இவளும் அவன் மனதை முழுவதும் படித்தவள் போல் பொரியல் செய்து வைத்தாள். அன்றும் சாப்பிட வந்த கணவன் கோபப்பட்டான். அன்று முட்டை அவித்தது சுவையாக இந்தது என்று தான் வாங்கி வந்தேன் நீ பொரியல் செய்துவிட்டாயே? என்று கோபப்பட்டான். மறுபடியும் ஒரு நாள் முட்டை வாங்கி வந்தான். மனைவி ஒரு முட்டையை அவித்து ஒரு முட்டையில் பொரியல் செய்து வைத்தாள். இன்று அவனால் எந்தக்குறையும் சொல்ல முடியாது என்று நம்பினாள். சாப்பிட உட்கார்ந்த கணவன் இரண்டையும் பார்த்துவிட்டு என்ன இது பொரியல் செய்ய வேண்டி முட்டையை அவித்துவிட்டாய் அவிக்க வேண்டிய முட்டையை பொர்pத்துவிட்டாய்? என்று கோபப்பட்டான்.