07-10-2004, 06:56 AM
ஒரு சிறிய விமானத்தில் ஒரு பாதிரியார் ஒரு சேவகன் ஒரு வயதானவர் மற்றும் ஒரு அதிபுத்திசாலி பயணம் செய்தார்கள். ஒரு கட்டத்தில் விமானம் பழுதடைந்துவிட்டது. விமானி மூன்று பரசூட்டுகளை அவர்களிடம் கொடுத்து யார் அவற்றை அணிந்து உயிர்பிழைக்கவேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் எனக்கூறி சென்றுவிட்டார். பாதிரியார் நான் இறந்தால் பரலோகம் போவேன் ஆகவே என்னைப்பற்றிக்கவலைப் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். வயதானவர் இனி நான் வாழந்து ஓன்றும் ஆகப்போவதில்லை எனவே நீங்கள் மூவரும் பரசூட்டை அணிந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றார். சேவகன் இருங்கள் இருங்கள் கவலைவேண்டாம் மூன்று பரசூட்டுகள் இருக்கின்றது நாம் மூவருமே உயிர் பிழைத்துக்கொள்ளலாம்;. நான்காம் நபரான அதிபுத்திசாலி பரசூட் என்று எனது பையை அணிந்து குதித்துவிட்டான் என்றான் பவ்யமாக.


