07-10-2004, 06:26 AM
இந்தியாவில் இருந்து ஓரு சுற்றுலாப்பயணி தன் மனைவி மற்றும் மாமியாருடன் இயேசு வாழ்ந்த நகரைச் சுற்றிப்பார்க்கவந்திருந்தார். திடீரென அவரது வயதான மாமியார் இறந்து போனார். அவரது உடலை அங்கே புதைப்பதற்கு 300 ரூபாயும் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு 5000 ரூபாயும் ஆகும் என மருத்துவமனை ஊழியர்கள் சொன்னார்கள். அவர் தன் மாமியின் உடலை சொந்த நாட்டிற்கே எடுத்துச்செல்லவிரும்புவதாக சொன்னார். அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் ஏன் இங்கு புதைத்தால் 300 ரூபாய்தான் செலவாகும் அதுமட்டுமல்ல இது புண்ணி புூமி என்று சொன்னார்கள். அதற்கு அவர் வேண்டாம் இங்கே இயேசு இறந்து அவரைப்புதைத்தபோது அவர் மூன்று நாட்களிலே உயிர்த்துவந்துவிட்டார். என்மாமியார் மீண்டும் உயிர்த்து வந்துவிடக்கூடாது. நான் அவரது உடலை எனது நாட்டிற்கே எடுத்துப்போய்விடுகிறேன் என்றார் பயத்துடன்.


