07-09-2004, 12:31 PM
<b>லண்டனில் நேற்று அதிகாலை ஸ்கொட்லான்ட் யாட் பொலிஸாரின் சுற்றிவளைப்பு தேடுதலில் 13 இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கைது</b>
பெருந்தொகைப் பணம், கடன் அட்டைகள், ஆயுதங்கள் மீட்பு
லண்டனில் இலங்கைத் தமிழ் சமூகத்தினர் வாழ்கின்ற பகுதிகளை நேற்று வியாழக்கிழமை திடீரென சுற்றிவளைத்த ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 13 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கத்திகள், வாள்கள், கோடரிகள், துப்பாக்கிகளுடன் பெருந்தொகைப் பணம், ஏராளமான கடன் அட்டைகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
லண்டன் மாநகரத்தின் பிரென்ட், ஹரோ, றெட்பிரிஜ், குறொய்டொன் மற்றும் நியூஹாம் ஆகிய இடங்களை சுமார் 250 இற்கும் அதிகமான பொலிஸார் அதிகாலைப் பொழுதில் திடீரென சுற்றிவளைத்ததாகவும், குறிப்பாக 22 முகவரிகளில் தீவிர தேடுதல் நடத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 13 தமிழ் இளைஞர்களும், 18 முதல் 25 வயதிற்கிடைப்பட்டவர்கள் என்றும், சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற பல்வேறு இடங்களிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நகர பொலிஸ் அதிகாரியான அல்பிரட் ஹிட்ச்ஹொக் கூறினார்.
லண்டனில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து வருவதாகவும், ஒரு சிறு குழுவினர் தான் சட்டத்திற்கு முரணாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குரியவர்கள் தங்கியிருந்த ஒரு முகவரியை சோதனையிட்ட போது, ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்து 3 வாள்கள், 3 கோடரிகள், பேஸ்போல் மட்டைகள், ஹொக்கி தடிகள், கடன் அட்டைகள், கடன் அட்டை வாசிக்கும் கருவி என்பவற்றையும் கைப்பற்றினர்.
மற்றுமொரு முகவரியிலிருந்து ஐவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் பண மோசடியுடனும், மற்றையவர்கள் களவு மற்றும் மோசடிகளுடனும் தொடர்புபட்டவர்கள். அதிகாலை நடவடிக்கையில் மட்டும் எல்லாமாக 11 000 பௌன்ஸ் பணம், 4 500 வெற்றுக் காசோலைகள், 69 கடன் அட்டைகள், 2 கணினிகள், 15 வீடியோ றெக்கோடர்கள், 30 000 பௌன்ஸ் பெறுமதியான மேர்சிடஸ் கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பொலிஸாருக்கு தெரிவிப்பதற்காக அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்கென விசேட தொலைபேசி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இருவர் போதைவஸ்து கடத்தல் தொடர்பாகவும், மற்றொருவர் நீதிமன்ற பிடியாணைக்கமையவும் கைது செய்யப்பட்டனர். 10ற்கும் மேற்பட்ட கொலைகளுடன் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
தொடர்ந்து நேற்றைய தினம் பூராகவும் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். இதற்காக, மேலும் 250 பொலிஸார் மாலையில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நன்றி தினக்குரல்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>