07-08-2004, 04:07 PM
<img src='http://www.richardmay.com/coupbeach.jpg' border='0' alt='user posted image'>
காலை சோபை இழந்து
கவலைதோய்ந்த பொழுதாய்
இன்றுடன் ஆயிற்று சில திங்கள்
அவள் தொலைபேசி ஊடல் இல்லை
மின்னஞ்சல் மென்வருடல் இல்லை
என்னவாயிற்று என்னை மறக்க
என்றென்றும் நினைப்பதில்லை அவள்
அலுவலகம் சென்று அதட்டும் வேலைக்கிடையிலும்
அவளின் மின்னஞ்சல் தேடும் விழிகள்
மதியநேரம் வாசலோரம் மணியடிக்கும்
தபால்காரனை தாவித்தேடும் ஆசை மனசு
சில்லறையாய் தொலைபேசி சினுங்கினால்
ஆவல்பொங்க அதைநோக்கின் யாரோ தொடர்பில்
பாசத்தின் பொறுமையை சோதிக்கின்றாளா ?
ஓர் நொடி எனை மறக்காதவள்
ஓசையின்றி கழிந்த ஈர்திங்களாய் எங்கு சென்றாள்
அன்னைமுகம் காண விரைந்தவள்
அங்கேயே ஜக்கியமாகிவிட்டாளோ !
"என்னவாயிற்று என் செல்லக்குட்டிக்கு ? "
இறுதியாய் அவளுடன் கதைத்தது நினைவில் வந்தது
" நான் சந்தோசமாய் வந்து சேர்ந்துவிட்டேன் "
" நேரத்திற்கு சாப்பிடனும், நேரத்திற்கு உறங்கணும்."
"யாருமில்லா நேரம் தொடர்பு கொள்கின்றேன் "
ம்
இன்றுவரை தனிமை உன்னை ஆட்கொள்ளவில்லையா ?
இனி
கதைக்கும்போது நன்றாக கேட்டுக்கொள்ளவேண்டும்
எனை ஏன் மறந்தாய் என்று
ஏசித்தீர்க்கவேண்டும் - மனசுக்குள்
கடுமையாக திட்டித்தீர்த்துக்கொண்டேன்
இன்றுவரை நேரில் ஓர் வார்த்தை
கடுமையாய் பேசியதில்லை
நினைத்துக்கொண்டிருந்தபோது
தொலைபேசி சினுங்கித்தொலைத்தது
ஆவலுடன் நோக்கினேன்
புதிய இலக்கம்
எடுத்தவேகத்தில் ஏச நினைத்தேன்
மறுமுனையில் மௌனமும் சினுக்கமும்
"என்ன நடந்தது ? " " ஏன் அழுகின்றாய் ? "
"உனை மறந்து நிறைய நாள் இருந்திட்டேன்டா "
"எனை மன்னித்துக்கொள்ளடா "
"என் வீட்டில் எல்லாம் எதிர்ப்பு"
"நாம் இணைவது இனி இறைவன் கரங்களில்தான்"
அனலுடன் இருந்த என் மனசு
உறைபனியாய் விறைத்து நின்றது
எனை மறந்தாய் என நினைத்தேன் - நீயோ
எனை மறக்கமுடியாமல் உனையே வதைக்கின்றாயே
"அழுவதை நிறுத்து"
"என் அருகினில் நீ இருப்பாய்"
"என்றும் எமை யாரும் பிரிக்க முடியாது"
"நாம் என்றோ இணைந்துவிட்டோம்"
"இது தற்காலிக பிரிவு"
"பொறுமை கொள் உன்னை"
"விரைவில் மீட்டுக்கொள்வேன்"
ஆறுதல் வார்த்தைகூறி ஆசுவாசம் செய்து வைத்தேன்
இன்றுவரை அவளை திட்டியதில்லை
கோபம் வந்தாலும் எனக்குள்ளேயே
பொசுக்கி போட்டு என்னை மாற்றிக்கொள்வேன்
பாசம் மிகுமிடத்தில் கோபம் ஏன் தோன்றுகின்றது
கலங்கிய அவள் விழிகள்
சினுங்கிய அவள் குரல்
கேட்ட செவிகள் இன்றுவரை
இமைகளை மூடவிட்டதில்லை
உறங்கா விழிகளுடன் அவளிற்காய்
28.04.2004
காலை சோபை இழந்து
கவலைதோய்ந்த பொழுதாய்
இன்றுடன் ஆயிற்று சில திங்கள்
அவள் தொலைபேசி ஊடல் இல்லை
மின்னஞ்சல் மென்வருடல் இல்லை
என்னவாயிற்று என்னை மறக்க
என்றென்றும் நினைப்பதில்லை அவள்
அலுவலகம் சென்று அதட்டும் வேலைக்கிடையிலும்
அவளின் மின்னஞ்சல் தேடும் விழிகள்
மதியநேரம் வாசலோரம் மணியடிக்கும்
தபால்காரனை தாவித்தேடும் ஆசை மனசு
சில்லறையாய் தொலைபேசி சினுங்கினால்
ஆவல்பொங்க அதைநோக்கின் யாரோ தொடர்பில்
பாசத்தின் பொறுமையை சோதிக்கின்றாளா ?
ஓர் நொடி எனை மறக்காதவள்
ஓசையின்றி கழிந்த ஈர்திங்களாய் எங்கு சென்றாள்
அன்னைமுகம் காண விரைந்தவள்
அங்கேயே ஜக்கியமாகிவிட்டாளோ !
"என்னவாயிற்று என் செல்லக்குட்டிக்கு ? "
இறுதியாய் அவளுடன் கதைத்தது நினைவில் வந்தது
" நான் சந்தோசமாய் வந்து சேர்ந்துவிட்டேன் "
" நேரத்திற்கு சாப்பிடனும், நேரத்திற்கு உறங்கணும்."
"யாருமில்லா நேரம் தொடர்பு கொள்கின்றேன் "
ம்
இன்றுவரை தனிமை உன்னை ஆட்கொள்ளவில்லையா ?
இனி
கதைக்கும்போது நன்றாக கேட்டுக்கொள்ளவேண்டும்
எனை ஏன் மறந்தாய் என்று
ஏசித்தீர்க்கவேண்டும் - மனசுக்குள்
கடுமையாக திட்டித்தீர்த்துக்கொண்டேன்
இன்றுவரை நேரில் ஓர் வார்த்தை
கடுமையாய் பேசியதில்லை
நினைத்துக்கொண்டிருந்தபோது
தொலைபேசி சினுங்கித்தொலைத்தது
ஆவலுடன் நோக்கினேன்
புதிய இலக்கம்
எடுத்தவேகத்தில் ஏச நினைத்தேன்
மறுமுனையில் மௌனமும் சினுக்கமும்
"என்ன நடந்தது ? " " ஏன் அழுகின்றாய் ? "
"உனை மறந்து நிறைய நாள் இருந்திட்டேன்டா "
"எனை மன்னித்துக்கொள்ளடா "
"என் வீட்டில் எல்லாம் எதிர்ப்பு"
"நாம் இணைவது இனி இறைவன் கரங்களில்தான்"
அனலுடன் இருந்த என் மனசு
உறைபனியாய் விறைத்து நின்றது
எனை மறந்தாய் என நினைத்தேன் - நீயோ
எனை மறக்கமுடியாமல் உனையே வதைக்கின்றாயே
"அழுவதை நிறுத்து"
"என் அருகினில் நீ இருப்பாய்"
"என்றும் எமை யாரும் பிரிக்க முடியாது"
"நாம் என்றோ இணைந்துவிட்டோம்"
"இது தற்காலிக பிரிவு"
"பொறுமை கொள் உன்னை"
"விரைவில் மீட்டுக்கொள்வேன்"
ஆறுதல் வார்த்தைகூறி ஆசுவாசம் செய்து வைத்தேன்
இன்றுவரை அவளை திட்டியதில்லை
கோபம் வந்தாலும் எனக்குள்ளேயே
பொசுக்கி போட்டு என்னை மாற்றிக்கொள்வேன்
பாசம் மிகுமிடத்தில் கோபம் ஏன் தோன்றுகின்றது
கலங்கிய அவள் விழிகள்
சினுங்கிய அவள் குரல்
கேட்ட செவிகள் இன்றுவரை
இமைகளை மூடவிட்டதில்லை
உறங்கா விழிகளுடன் அவளிற்காய்
28.04.2004
[b] ?

