07-07-2004, 04:14 PM
குண்டுவெடிப்பு சம்பவ இடத்திற்கு அரசாங்க இரசாயன பரிசோதர்கள் அவசரமாக அழைப்பு
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அரசாங்க இரசாயன பரிசோதகர்கள் அவசரமாக அழைக்கப்பட்டு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று நண்பகல் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்க வைத்ததில் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட நான்கு பொலிசார் உயிரிழந்துள்ளனர்.
குண்டை வெடிக்க வைத்த பெண் தற்கொலைதாரியும் உடல் சிதறி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் பத்துப் பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் எட்டுப் பேர் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள். இரண்டு பேர் சிவிலியன்கள்.
இன்று முற்பகல் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இந்து கலாசார அமைச்சுக்கு இளம்பெண் ஒருவர் அமைச்சரைப் பார்க்க வேண்டும் எனக் கூறி உள்ளே செல்ல முயன்றுள்ளார்.
அவரைப் பரிசோதிக்க அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் முயன்றுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சந்தேகம் கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இரண்டு பெண் பொலிசாரிடம் சம்பந்தப்பட்ட யுவதியை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர்.
அதற்கமைய அந்த யுவதி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அங்கு கடமையிலிருந்த பொலிசார் இவரை சோதனையிட முயன்ற வேளையிலேயே குண்டை வெடிக்க செய்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து கொழும்பு நகரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறிசேன ஹேரத் தெரிவித்தார்.
குண்டுதாரி தங்கியிருந்த இடத்தை கண்டுபிடிக்க விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிறிசே ஹேரத் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை குறிவைத்தே இந்த குண்டுதாரி அனுப்பப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக பொலிஸ் மா அதிபர் இந்திரா டி சில்வா தெரிவிக்கின்றார்.
-------------------
தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் கைது!
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பெண்ணுடன் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பெண்ணை விசேட அதிரடிப்படை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண்ணை விசாரணை செய்யும் பொருட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப்படை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணுடன் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண் இருந்ததற்கான தகவல் கிடைத்துள்ளது என்று உயரதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>