07-07-2004, 10:56 AM
kavithan Wrote:<span style='font-size:30pt;line-height:100%'><b>சம்பவம் 2</b></span>
<b>15 </b> பேர் பிறந்தமேனியோடு கடைக்குள் நுழைவதைச் சற்று கற்பனை செய்து பார்க்கின்றீர்களா? ஆனால் இந்த நிகழ்வு கற்பனையல்ல. கடந்த மாதம் 21ந்திகதி இரவுதான், இந்த விபரீதமானதும் வித்தியாசமானதுமான நிகழ்வு இலண்டன் மாநகரில் அரங்கேறி இருக்கின்றது. Oxford Street இலுள்ள பிளாஸா விற்பனை நிலையத்தில்தான் இந்தத் திருக்கூத்து நடந்தேறி இருக்கின்றது. கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய, நிர்வாண கோலத்தில் வரும்படி, விற்பனை நிலைய உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பணியாற்றுபவர்களோ நாகரீகமாக, முழுமையான உடை அணிந்திருக்க வேண்டுமாம். 15 பேர்தான் அழைப்பை ஏற்று அந்த இரவு வந்திருந்தார்கள். யூரோ 2004 காற்பந்தாட்டப் போட்டிகள், பலரை எம்மிடம் வராது தடுத்து விட்டன. மீண்டும் இப்படியொரு அழைப்பை விடுக்க இருக்கின்றோம் என்கிறார் இந்த விற்பனை நிலையத்தின் பேச்சாளர். இலண்டன் பலவழிகளிலும் முன்னேற்றந்தான் போங்கள்.
நன்றி
சூரியன் இணையம்
<b>நிர்வாண கோலத்தில் வரும்படி விற்பனை நிலைய உரிமையாளர்கள் அழைப்பு விடுத்தால் இவர்களும் அப்படியே போவார்களா?
எங்கெங்கே எப்படிஎப்படி போகவேண்டும் என்ற விவஸ்தையே இல்லையா?
ம்ம்ம்ம மாமா நல்ல சுவாரசியமானவை தான். தொடருங்கள்.</b>
----------

