07-07-2004, 12:40 AM
<b><span style='font-size:30pt;line-height:100%'>சம்பவம் 4</b></span>
<b>17 </b> வயதான ருஷ்யாவின் புதிய டென்னிஸ் தாரகையான Maria Sharapova வினை இன்னொரு பிரபல்யமான Anna Kournikova உடன் ஒப்பிடுவது நியாயமானதல்ல என்கிறார்கள் அவதானிகள். இருவருமே 14 வயதில் தொழில்ரீதியாக டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர்கள்தான். இருவருமே அமெரிக்காவில் விளையாட்டுப் பயிற்சி பெற்றவர்கள்தான். இருவருமே Model களாகப் பணியாற்ற பல ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டவர்கள்தான். என்றாலும் Grand Slam மோதலில் வென்றவர் என்பதால், மரியா தனித்துவம் பெறுகின்றார். 9 வது வயதில் தனது பயிற்சியை அப்பாவுடன் வந்து ஆரம்பித்த போது, விசாப் பிரச்சினையால், தாய் 2 வருடங்கள் மகளுடன் வர முடியாத நிலை வந்தது. இப்படியொரு பிரிவிலும் முழுமூச்சாகப் பயிற்சியில் ஈடுபட்டு, இன்று விம்பிள்டன் வெற்றியால் புகழின் உச்சிக்கு வந்துள்ள இவர் அற்புதமான வீராங்கனைதான்.
<b><span style='font-size:30pt;line-height:100%'>சம்பவம் 5</b></span>
<b>7000 </b> பார்வையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில், காதலியையோ அல்லது மனைவியையோ தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவது என்பது சற்று சுவாரஸ்ஸியமான விடயந்தான். Finland நாட்டில் மனைவியைத் தோளில் போட்டுக் கொண்டு ஒடும் இந்த வருடத்திற்கான போட்டி நடந்தேறி இருக்கி;னன்றது. இது 13 வது போட்டியாகும். தமது மனைவிமாரையோ அல்லது காதலிமாரையோ தோளில் தூக்கிக் கொண்டு தடைதாண்டி ஓடி, பந்தயத்தில் ஜெயித்தாக வேண்டும். பெண்ணுக்குக் குறைந்த பட்சம் 17 வயதாவது இருக்க வேண்டும். எடை 49 கிலோவுக்குக் குறையக்கூடாது. இந்த வருடம் பல நாடுகளிலும் இருந்து வந்த 21 ஜோடிகள் போட்டியில் பங்குபற்றி இருக்கிறார்கள். இந்தத் தடவை Estonia நாட்டு ஜோடியொன்று வெற்றியடைந்துள்ளது. ஒடும் போது வழியில் வரும் குளத்தில் இறங்கி. இடுப்பளவு ஆழத்தில் நடக்கவும் வேண்டும். அதுவும் தோளில் இன்பச் சுமையோடு. ஓடிட்டு கட்டிக்கலாமா? அலலது கட்டிக்கிட்டு ஓடிக்கலாமா?
நன்றி
சூரியன் இணையம்

[b][size=18]