06-18-2003, 01:05 PM
போராளிகள் நடமாட்டம் கடலில்தொடரும் படையினர் தடுத்தால் மோதல் ஏற்படக் கூடும் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் தமிழ்செல்வன் தெரிவிப்பு.
எமது கடற் பிரதேசத்தில் போராளிகளின் போக்குவரத்து மற்றும் பயிற்சிகள் தொடரும். இந்தப் பிரதேசத்தில் எமது கலங்களை தடுத்தல், பரிசோதித்தல் போன்ற செயற்பாடுகளை சிறீ லங்கா கடற் படையினர் தவிர்க்கவேண்டும். இதை மீறி கடற் படையினரின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அது மோதல் ஏற்பட வழிவகுக்கும். இப்படிக் கூறினார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். கிளிநொச்சிக்கு வருகைதந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரிக்வே டெலிவ்சனிடம் தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிளிநொச்சிக்கு 14.06.2003 காலை வந்த டெலிவ்சன், புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் தமிழ்ச் செல்வனை முற்பகல் 11.30 மணிக்கும் சந்தித்து இரு மணி நேரம் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ்ச் செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
எமது கடற்பகுதியில் போராளிகள் போக்குவரத்து மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அந்தப் பகுதிக்குள் கடற்படையினர் சோதனை, தடுத்து நிறுத்தல் போன்ற அச்சுறுத்தற் செயற்பாடுகளைத் தவிர்க்கவேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தோம். கடற்படையினர் அச்சுறுத்தற் செயற்பாடுகளில் ஈடுபடுவது மோதல் ஏற்பட வழிவகுக்கும். இந்த விடயம் பற்றி சரியான நடவடிக்கைளை கண்காணிப்புக் குழு மேற்கொள்ளவேண்டும். பரஸ்பரம் ஆள்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை இரு தரப்பினரும் நீடிக்க விடக்கூடாது. இந்தநிலை தொடர்ந்தால் நெருக்கடி, முறுகல் நிலை என்பன ஏற்படலாம். அத்தகையதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்க்க யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். ஒரு தரப்பு ஒருவரைக் கைது செய்யும் போது ஏற்படும் யுத்த நிறுத்த மீறல் செயலை கண்காணிப்புக் குழு உடன்விசாரித்து அதற்கான தீர்வை ஏற்படுத்தவேண்டும். இந்தப் பொறுப்பை கண்காணிப்புக் குழு ஏற்கவேண்டும் என்று ஆலொசனை வழங்கியுள்ளோம்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் கொலைகள், கொள்ளைகள் போன்ற சம்பவங்களை நிறுத்தவேண்டியது, அந்தப் பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கைப் பேணுபவர்களின் பொறுப்பாகும். இத்தகைய செயல்கள் அங்கு அதிகரிப்பதற்கு அவர்களின் பலவீனம்தான் காரணம். தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களினதோ அல்லது வேறு பொது மக்களினதோ கொலைகளுக்கு நாம் பொறுப்பல்ல.
கண்காணிப்புக்குழுவின் ஒழுங்கு, நடைமுறைகள், ஆள்களை அதிகரித்தல், அதிகாரங்களை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து எம்மிடம் கண்காணிப்புக் குழுத்தலைவர் பிரஸ்தாபித்தார். கடல் நடமாட்டம் தொடர்பாக எதிர் காலச்செயற்பாடுகள் குறித்து ஆலோசனைகள், பரிந்துரைகளை அவர் தெரிவித்தார். அவை தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் கூறினோம் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவருடன் குழுவின் பேச்சாளர் அக்னஸ் பிரகடொட்டிர், தலைமையக அதிகாரி ஹெயின்றிட்ஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.