07-07-2004, 12:19 AM
80 வது வயதில் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான Marlon Brando , லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமாகி இருக்கின்றார். இவர் இரண்டு தடவைகள் தனது சிறந்த நடிப்பிற்காக ஒஸ்கார் விருதுபெற்றவர். 1972இல் நடித்து வெளியாகிய The Godfather என்ற திரைப்படம், இவர் நடிப்பாற்றலை உலகுக்கு முழுமையாக வெளிப்படுத்தியது. மாபியாக் கும்பலின் தலைவர் பாத்திரத்தை ஏற்று இவர், இத் திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். 1973இல் இரண்டாவது தடவையாக ஒஸ்கார் விருது கிடைத்தபோது, இவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
அமெரிக்க இந்தியர்களுக்காக நியாயம் கோரியே இவர் பரிசை ஏற்கவில்லை. 1978இல் Superman என்ற திரைப்படத்தில் 10 நிமிடங்கள் மாத்திரமே நடித்து 4 மில்லியன் டாலர் ஊதியம் வாங்கிய இவர், தன் வாழ்க்கையின் பிற்பகுதியில், நிதிநெருக்கடியினால் திணறியிருக்கின்றார் முன்னொரு காலத்தில் 100 மில்லியன் டாலர் பெறுமதி வாய்ந்தவராக இருந்த இவர், இறக்கும்போது 20 மில்லியன் டாலர் தொகைக்குக் கடனாளியாக இருந்துள்ளார் என்று சொல்லப்படுகின்றது. 3 தடவைகள் திருமணம் செய்து கொண்ட இவருக்கு 11 பிள்ளைகள் வரையில் இருக்கின்றார்கள.
http://sooriyan.com/index.php?option=conte...&id=586&Itemid=

[b][size=18]