07-06-2004, 04:37 PM
சிறிலங்கா பொலிசார் கொலையாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை: பொதுமக்கள் விசனம்
மட்டக்களப்பு அரசடிச் சந்தியில் விடுதலைப்புலிகள் மீது நேற்றுக்காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது சில நூறு யார் தூரத்தில் சிறிலங்கா பொலிசார் நின்றிருந்ததாகவும் அவர்கள் எதுவித நடவடிக்கையுமெடுக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா படைத் தரப்பினரின் ஒத்துழைப்பின்றி இவ்வாறான தாக்குதல்களை தேசவிரோதிகள் செய்ய முடியாது எனவும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிசார் எதுவும் செய்யாது நின்றது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
----------------------------
இராணுவத்தின் பாதுகாப்பிலிருக்கும் தேசவிரோதிகளே தாக்குதல் நடத்தினர்
மட்டக்களப்பு அரசடியிலும் வந்தாறுமூலையிலும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் ஒரே ஆயுததாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இரு கொலைச் சம்பவங்களையும் மேற்கொண்ட நபர்கள் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமணிந்து அலுவலக உத்தியோகத்தர்கள் போன்று வந்தே துப்பாக்கிப் பிரயோகம்; செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் இராணுவத்தினரின் பாதுகாப்பிலிருக்கும் தேச விரோதிகளே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>