07-06-2004, 04:35 PM
சிங்கள தேசம் போரைத் திணித்தால் நாம் விடுதலையை வென்றெடுப்போம்: கரும்புலிகள் தின நிகழ்வில் சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ்
சிங்கள தேசம் யுத்தம் ஓய்ந்த காலத்திலேயே மீண்டும் யுத்தத்தை திணிப்பதற்கு முனைந்தால் தேசியத் தலைவனது செயற்பாடுகளுடாக நாங்கள் நிட்சயம் விடுதலையை வென்றெடுப்போம்.
என மட்டு.அம்பாறை சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கரும்புலிகள் தின பிரதான நிகழ்வு நேற்று பழுகாமம் பொது விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சிறப்பு தளபதி கேணல் ரமேஷ் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழர் தாயகத்தை முதற்கட்டமாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பது தேசியத் தலைவரின் நோக்கமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை கட்டமைப்பை சிங்கள அரசு ஏமாற்றி காலத்தை கடத்தி வருகிறது. இது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
இவ்வாறு தொடர்ச்சியாக சிங்கள அரசு ஏமாற்ற நினைத்தால் சிங்கள அரசுகளின் தவறுகள் பிழைகளை சர்வதேச சமூகத்துக்கு தேசியத் தலைவரின் பின்னால் அணி திரண்டு உணர்த்துவோம்.
நாங்கள் மிகவும் பலமாக வலுவாக இருக்கிறோம். இதன் காரணமாகத்தான் எங்களது பலத்தை சிதைக்க பல சதி முயற்சிகள் நடைபெறுகின்றன. இதை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் எனக் குறிப்பிட்ட சிறப்புத் தளபதி மேலும் கூறுகையில், எமது போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இற்றைவரை பல துரோக செயல்களும் துரோகிகளும் எமது போர் முனைகளில் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அனைத்து தடைகளையும் எமது தேசியத் தலைவர் அவர்கள் உடைத்தெறிந்து இன்று தமிழீழத்தை நோக்கிய நகர்விலே நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
எங்களுடைய தேசியத் தலைவனது கால கட்டத்திலே நிட்சயம் நாம் விடுதலையைப் பெறுவோம். எமது தேசிய தலைவனை பொறுத்த மட்டில் இவர் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல ஏனெனில் தமிழர்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதில் எங்களுக்கொரு தலைமைத்துவத்தை எங்களுடைய இயக்கம் தந்துள்ளது. எங்களது தேசியத் தலைவன் அவர்களை ஒவ்வொரு கூட்டங்களில் சந்திக்கும் போது வித்தியாசமான புதுமைகளை அவரிடம் காண்போம். அந்த தலைவன் தான் இன்று எம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கின்றான். நிட்சயமாக சிங்கள தேசம் இன்று அரசியல் hPதியாக யுத்தம் ஓய்ந்தகாலத்தில் யுத்தத்தை மீண்டும் திணிப்பதற்காக முனைந்தால் எங்களுடைய தேசியத் தலைவனது செயற்பாடு ஊடாக நிட்சயமாக நாங்கள் விடுதலையை வென்றெடுப்போம் என்றார்.
நேற்று பி.ப. 4.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் ஈகைச் சுடரினை கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளதிப சிறிராம் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை மட்டு. அம்பாறை சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் ஏற்றிவைத்தார்.
மட்டு. அம்பாறை மகளிர் அரசியல் பொறுப்பாளர் குவேனி தலைமையுரையினையும், கள ஆசிரியர் காண்டீபன் நினைவுரையினையும் நிகழ்த்தினர்.
மட்டு. அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ.கௌசல்யன், மாவடி முன்மாரிக் கோட்ட இராணுவத் தளபதி ரமணன் மற்றும் தளபதிகளும் கலந்து கொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான த.கனகசபை, பா.அரியநேத்திரன், தங்கேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் கலை நிகழ்வு, தமிழீழ இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதேவேளை மட்டக்களப்பு நகர் உட்பட பல இடங்களிலும் கரும்புலிகள் தின நினைவாக அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[url=http://www.eelampage.com/index.shtml?id=200406061615055585&in=]மேலும் படங்களுக்கு இங்கு அழுத்தவும்
-------------------------
எம்மீது யுத்தம் திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராகவிருக்கின்றோம்: அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்
'எமது மக்கள் மீது, எமது போராளிகள் மீது, இந்த தமிழர் படை மீதும் யுத்தம் திணிக்கப்படுமாகாவிருந்தால் அதை எதிர்கொள்வதற்கு நமது தேசியத் தலைவனின் கட்டளை எதிர்பார்த்து இன்றும் தயாராகவுள்ளோம்."
இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் த.குயிலின்பன் சூளுரைத்தார்.
அம்பாறை மாவட்ட கரும்புலிகள் தின பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி பிரதான நிகழ்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் கரும்புலி ஒருவரின் தாயாரான சா.வள்ளியம்மை பொதுச் சுடரை ஏற்ற, விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் முரளி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அத்துடன் கரும்புலிகளின் புகைப்பட காட்சியகத்தை திகாமடுல்ல மாவட்ட தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் திறந்து வைத்தார்.
விடுதலைப்புலிகளின் மாவட்ட மகளிர் அமைப்பைச் சேர்ந்த இசைப்பாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட தமிழர் மேம்பாட்டு அவைத் தலைவர் கே.நடராஜா தர்மலிங்கம், உட்பட பல முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டதுடன், கரும்புலிகளின் படங்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தினர்.
மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
'இன்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நாம் பாரிய படைக்கட்டுமானத்தை வைத்திருக்கின்றோம் ஆனால் எமது எதிரிகள் எமது படைகளை சிதைக்க முற்பட்டும், எம்மைத் தாக்கவும் முனைந்துள்ளான்.
எம்மை எதிரி பலமாக இல்லையென நினைத்து இத்தாக்குதல்களை மேற்கொள்கின்ற போதிலும், முடிந்தால் எம்மோடு யுத்தம் செய்ய முன்வரட்டுமெனக் கூறுகின்றோம்.
அப்பொழுது எமது பலம் எத்தகையது என்பதை எதிரிக்கு உணர்த்துவோம்.
இன்று யுத்தமா, சமாதானமா என்ற சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இன்றும் கூட எமது போராளிகள் தாக்கப்பட்டுள்ளனர். எமது போராளிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால் எமது தேசியத் தலைவர் இன்னும் எல்லை கடந்த பொறுமையுடனிருப்பது சமாதானத்தின் பால் அவர் காட்டும் பெரும் அக்கறைக்கு எடுத்துக் காட்டாகும்.
நாம் யுத்தத்தை விரும்புபவர்களல்ல, நாம் யுத்தத்தில் நின்றவர்கள், யுத்த மையப் பகுதியில் நின்றதன் காரணமாக கைகளைக், கால்களை இழந்ததோடு, அதற்கும் மேலாக தாயக விடுதலைப்போரில் 17, 648 மாவீரர்களைக் கூட விலை கொடுத்து நிற்கின்றோம்.
கரும்புலிகளின் சாதனை விடுதலைப் போராட்டத்தில் புதிய பரிமாணத்தைத் தந்தது.
பொருத்தமான, இறுக்கமான காலகட்டத்தில் கரும்புலிகளே தடைகளை உடைத்து விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றனர். இதுவே கரும்புலிகளின் உன்னதமான சாதனையாகும்.
உலக விடுதலைப் போராட்டங்களை நாம் நோக்கினால், துரோகச் செயல்களும் இருந்தே வந்துள்ளது.
எமது விடுதலைப் பேராட்டத்தில் இவ்வாறு எதிர்நோக்கிய பல துரோகச் செயல்களை மிகத்துல்லியமாகவும், மிக நேர்த்தியாகவும் முறியடித்து வெற்றி கண்டுள்ளார் நம் தலைவர்.
அண்மையில் நமது மாவட்டங்களில் இத்தகையதொரு சூழ்நிலை ஏற்பட்ட போதும், அதனை முறியடித்து தமிழனின் பலத்தை, தமிழ்த் தேசியப்படையின் பலத்தை மீண்டுமொருமுறை உலகிற்கும்,சிங்களத் தேசத்திற்கும், எம்மை எள்ளி ஏளனமாக நினைக்கும் எதிரிக்கும் நிரூபித்துள்ளார்.
எனவே எமது படையைச் சிதைக்க நினைக்கும், சிதைக்க முற்படும் எதிரி நாங்கள் இன்று ஓர் படைக்கட்டுமானத்தைக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர வேண்டும்.
இதேவேளை மாவீரர்களின் தியாகத்தை மதிக்கின்றவர்களாக, தேச விடுதலையை நேசிக்கின்றவர்களாக, மாவீரர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்கின்றவர்களாக, தேசவிடுதலைக்கு ஒன்றிணைந்து தோள் கொடுப்பவர்களாக மக்கள் மாற வேண்டும்.
தேச விடுதலையோடு நாம் ஒன்றித்து நிற்போமானால் எந்தப் படைவந்தாலும் எமது காலடியில் அது து}சாகமாறும்.
தமிழர்களெல்லாம் போராளிகளாகவும் போராளிகளெல்லாம் கரும்புலிகளாகவும் மாறும் காலம் வெகுது}ரத்தில் இல்லை.
கரும்புலிகளின் தியாகத்தை எம்மனங்களில் ஏந்தி, கரும்புலிகள் விட்டுச் சென்ற பாதையூடாக எமது தேச விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஓரணிதிரள வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>