07-12-2003, 07:44 PM
வரிகள்- சோதியா
குரல் - ஜேம்ஸ்
முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில்
தனிமை போக்கிய என் தண்ணொளி நிலவே
புலம் தேடிப் போன புலவனைக் காணவோ
நிலம் நீங்கி வந்தனை நீள் விழி நிலவே
நிலவு கழுவிய என் முற்றத்தைப் பிரிந்தேன்
புலவில் ஆடிய என் சுற்றத்தைப் பிரிந்தேன்
நிதமும் ஊர் நினைவில் உள்ளம் எரிந்தேன்
கனவில் கூட எந்தன் கண்கள் சொரிந்தேன்
அருகில் கால் நனைத்த அலையினைத் தொலைத்தேன்
உருகி எனை அழைத்த குயிலினைத் தொலைத்தேன்
போரில் ஊர் உயிர்க்கும் கண்டு மலைத்தேன்
நீரில் வேர் பதிக்கும் கனவு கலைத்தேன்
முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில்
தனிமை போக்கிய என் தண்ணொளி நிலவே
புலம் தேடிப் போன புலவனைக் காணவோ
நிலம் நீங்கி வந்தனை நீள் விழி நிலவே!
ஜேம்ஸ் இன் குரல் மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது:
பாடலின் வெற்றிக்கு அவரின் குரலும் காரணம்.

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa