07-05-2004, 05:03 PM
யுத்தம் காரணமாக வடக்கு - கிழக்கில் 15 ஆயிரம் பேர் உடல் உள ரீதியாக பாதிப்பு
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டென்மார்க் அரசின் உதவியுடன் இயங்;கும் புனர்வாழ்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு தவிர்ந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில்; நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமே இவர்களைத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக குடும்ப புனர்வாழ்வு நிலையத் திட்டம் என்ற பெயரிலான இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவும் வகையிலான தமது பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதிகளில் யுத்;தம் காரணமாக உடல், உளரீதியாகப் பாதிக்கபட்டவர்களாக இனங்காணப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு உதவியளிக்கும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு தேசிய கலாசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலகு கடன் தவணை அடிப்படையிலான சுயதொழில் உபகரணங்கள்; பாதிக்கபட்ட பொதுமக்களுக்கு இவ்வமைப்பினால் வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>