07-05-2004, 05:00 PM
மட்டக்களப்பில் இருவேறு சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலையில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தும், மற்றும் மூவர் காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர்.
விடுதலைப் புலிகளுடைய மட்டக்களப்பு மாவட்ட நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஆகியோர் மீது இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை 9.20 மணியளவில் மட்டக்களப்பு அரசடிச் சந்திப் பகுதியூடாக அரசடி அலுவலகத்தை நோக்கி வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகர அரசியல் துறைப் பொறுப்பாளர் சேனாதி மற்றும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் நிலான் ஆகியோர் மீதே மறைந்திருந்து இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயங்களுக்குள்ளான இருவரும் உடனடியாகவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சேனாதி ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடைய நுரையீரல் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளையில், மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பகுதியிலும் இன்று காலையில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் மீதும் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வந்தாறுமூலை தேவாலயம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற இந்த சூட்டுச் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாமா என்கின்ற போராளி வீரச்சாவடைந்திருப்பதாகவும், ஈஸ்வர் என்பவர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் மட்;டக்களப்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குள்ளாகி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுடைய மட்டக்களப்பு நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சேனாதியே, மட்டக்களப்பில் பதற்ற நிலையைத் தடுப்பது தொடர்பாக, மட்டக்களப்பு நகரில் இறுதியாக இடம்பெற்ற படையினருடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் சார்பாக கலந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>