07-05-2004, 01:47 PM
மதுரையில் எச்சில் இலைக்காக ஒரு கொலை
மதுரை:
திருமண மண்டபத்தில் எச்சில் இலை பொறுக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பன்றிகளை வளர்த்து வருகிறார்.
பன்றிகளுக்கு உணவு போடுவதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் போடப்பட்ட எச்சில் இலைகளை பொறுக்கிக் கொண்டிருந்தார் பார்த்திபன். அப்போது அங்கு வந்த கடச்சனேந்தலைச் சேர்ந்த பன்றி வளர்ப்பாளர் நாகராஜ் என்பவர், பார்த்திபன் எச்சில் இலையை எடுப்பதைக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டதால் நாகராஜ் சென்று விட்டார். ஆனால் சிறிது நேரத்தில் தனது ஆட்களோடு அங்கு வந்த நாகராஜ், எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டிருந்த பார்த்திபனை கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
படுகாயமடைந்த பார்த்திபன் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
எச்சில் இலைக்காக வாலிபர் படுகொலை செய்யப்பட்டது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>