07-05-2004, 01:04 AM
சிறைகளிலுள்ள தேசவிரோதிகளை சிறீலங்கா புலனாய்வுத்துறை பயன்படுத்துகிறது
கருணாவுடன் தப்பிச் சென்றோரில் ஓரிருவரைத் தவிர ஏனையோர் விடுதலைப்புலிகளிடம் மீண்டுள்ள நிலையில், சிறைச்சாலையிலுள்ளோருக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்திக் கொடுத்து கருணாவின் சகாக்கள் என்ற பெயரில் பேட்டிகளை வழங்குவதற்கு சிறீலங்காப் புலனாய்வுத்துறை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருணாவுடன் சேர்ந்தியங்கிய ஏழு பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், கருணாவின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட தேசவிரோத நடவடிக்கைகள் மிகவும் குறைந்திருந்தன. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பதட்டத்தைத் தோற்றுவிப்பதற்காக சிறீலங்காப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட மலினத்தனமான செயற்பாடு குறித்த தகவலை விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர்.
இதன் பிரகாரம், தற்போது சிறைக்கைதியாகவுள்ள சச்சி மாஸ்ரர் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை மகேந்திரன் என்பவருக்கு தொலைபேசி வசதிகளை சிறீலங்கா புலனாய்வுத்துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர் சிறையிலிருந்தவாறு ~மாறன்| என்ற புனைபெயரில் சிறீலங்கா புலனாய்வுத்துறையுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஊடகங்களிற்கு கருணாவின் சகா என்ற போர்வையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்த தகுந்த ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக தென்தமிழீழத்தைச் சேர்ந்த விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கணபதிப்பிள்ளை மகேந்திரனை, கடந்த மார்ச் மாதம் கருணா தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது தனது அம்பாறை மாவட்டத் தளபதியாக நியமித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இக் காலகட்டத்தில், மேற்படி நபரும் ஏனைய நால்வரும் ஆயுதங்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது காத்தான்குடிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி ஐவரும் காத்தான்குடியில் கைது செய்யப்படுமுன்னர் மட்டக்களப்பில் வழிமறிக்கப்பட்டராயினும், சிறீலங்காப் புலனாய்வுத்துறையின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் காத்தான்குடிப் பொலிசாருக்கு சிறீலங்காப் புலனாய்வுத்துறை இவர்களை விடுதலை செய்யுமாறு எழுத்துமூல அறிவுறுத்தலை விடுத்த போதும் அது பயணளிக்கவில்லை.
மார்ச் மாதம் 31ம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஐhர் செய்யப்பட்ட இவர்கள் பினையின்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே மேற்படி தேசவிரோதியை சிறீலங்காப் புலனாய்வுத்துறை பயன்படுத்துவது பற்றிய குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
கருணாவுடன் தப்பியோடியோரில் அனைவருமே கருணாவை கைவிட்டுள்ள நிலையில், சிறீலங்காப் புலனாய்வுத்துறைக்கு இவ்வாறான மலினத்தனமான செயற்பாட்டில் ஈடுபட்டு, கருணாவுடன் வேறு நபர்களும் இருப்பதாகக் காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர், இராணுவப் புலனாய்வுத்துறையின் பூரன ஆதரவுடன் ஒலிபரப்படும் ஒரு வானொலி நிலையத்திற்கு சிறையிலுள்ளவரை பேட்டி கொடுக்க வைத்து, தனது உளவியல் யுத்தத்தை அது தொடர விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>