07-04-2004, 12:22 PM
அம்பாறை படை முகாம்களில் அமெரிக்க அதிகாரிகள் பயிற்சி
அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறிலங்கா படைமுகாம்களில் சிவில் உடையில் வெளிநாட்டு அதிகாரிகள் வதிவிடப்பயிற்சி வழங்கி வருவதாகவும் இவ்வாறு பயிற்சிகள் வழங்கி வருவது அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளே என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருக்கும் இக்காலச் சூழலில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் பயிற்சியளிப்பது தமிழ் மக்களிடையே கடும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அண்மையில் அமெரிக்கா சிறிலங்கா அரசுக்கு போர்க் கப்பலை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சில சிறிலங்கா படைமுகாம்களில் தமிழ் மக்களை படையினர் மறைந்திருந்து வீடியோ படம் எடுப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
படைமுகாம்களுடாக செல்லும் பொதுமக்களை இவ்வாறு படையினர் மறைந்திருந்து இரகசியமாக ஒளி நாடாக்களில் பதிவு செய்வது மக்களை மேலும் அச்சமூட்டியுள்ளது.
ஒருபுறம் சமாதானம் எனும் போர்வையுடன் மறுபுறம் போரியல் நிலைக்கு தங்களை தயார் படுத்துவது குறித்து தமிழ் சமூகம் கவலை தெரிவித்துள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>