07-04-2004, 12:16 PM
கருணாவுக்கும் தமக்கும் தற்போதும் தொடர்பு உண்டு என்கிறார் டக்ளஸ்
கருணாவுக்கும் தமக்கும் தற்போதும் தொடர்பு உள்ளதென்றும் தாம் தொலைபேசி மூலம் கருணாவுடன் பேசிவருவதாகவும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கேசரி வார இதழுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த வெள்ளியன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கருணாவுடன் நாம் தொடர்புகொண்டு வருகிறோம். ஆனால் அவர் எங்குள்ளார் என்று அக்கறை காட்டவோ அல்லது அதுபற்றி கருணா எமக்கு தெரியப்படுத்தவேண்டிய அவசியமோ இருக்கவில்லை.
ஜனநாயக பாதைக்கு திரும்ப விருப்பமுள்ள கருணாவுக்கு ஆலோசனை வழங்கவேண்டியதும் உதவவேண்டியதும் எமது கடமையாகும்.
எமக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பு கட்சி hPதியானது மட்டுமே தவிர அமைச்சு hPதியானது அல்ல. இந்த வகையில் கருணாவுக்குள்ள ஜனநாயகம் மீதான ஆர்வத்துக்கு நாம் உதவுவோமே தவிர அவர் ஆயுதம் தூக்குவதற்கு நாம் உதவியளிக்கப்போவதில்லை.
நாம் கருணாவுக்கு உதவியளிப்பதால் அவர் ஈ.பி.டி.பி.யுடன் இணையவேண்டுமென்றோ அவர் எமது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றோ கூறவில்லை அப்படி நாம் எதிர்பார்க்கவும் முடியாது. அதுவிடயத்தில் தீர்மானம் எடுக்கவேண்டிய பொறுப்பு கருணாவுடையதே ஆகும். கிழக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு அரசியல் பின்னணி இருக்கிறது. எல்லாளன் படை, பண்டாரவன்னியன் படை, சங்கிலியன் படை ஆகியவையே அங்கு நடைபெறும் கொலைகளின் பின்னணியில் உள்ளன. அதற்காக கருணா தவறுவிடவில்லை என்று நான் கூறவரவில்லை என்றார். இடைக்கால நிர்வாகம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில்:-
நாங்கள் ஒரு காலத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம். அப்போது யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதனால் அவ்வாறான நிர்வாக அலகிற்கான தேவையிருந்தது. ஆனால் இப்போது அதற்கு அவசியமே இல்லை என்றார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்:-
இலங்கையின் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா கூடுதலான பங்களிப்பை செலுத்த வேண்டும் இந்தியாவின் பங்களிப் பிற்கூடாகத்தான் இலங்கைப் பிரச்சினையை விரைவாக தீர்க்கலாம் என்றும் நாம் நம்புகிறோம் என்றார்.
puthinam.com
---------------------
[size=16]யார் யார் எல்லாம் சன நாய் அகம் கதைக்கிறதெண்டு இல்லாமல் போச்சு உலகத்தில.... என்னத்தப் படிச்சு...என்னத்த வெட்டிவிழுத்த முடியும்...ஒன்றுமே படிக்கத் தேவையில்ல.... இரண்டு இரும்புக் குழாயும் உந்தச் சன நாய் அகப் போர்வையும் இருந்திட்டாப் போதும் சனத்தை தெரு நாயாக்கி நாம கோடீஸ்வரர்கள் ஆகிடலாம்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>