07-03-2004, 11:47 PM
Mathivathanan Wrote:ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
<b>சர்வதேச அழுத்தத்தைவைச்சு
சாதம் மட்டும் திண்டால் சரியா?</b>
யாழ்ப்பாணம் எவ்வளவு துரம் மாறிவிட்டது என்று பாருங்களேன். கலாச்சார அழிவும், பாலியல் படங்களும், களவும், நல்ல சுகபோகமான வாழ்க்கையுமா வேண்டும் :?: சிங்களவன் எப்படி எமது சமுதாயத்தை அழிக்கலாம் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறானே ஒழிய அவன் எங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை. அவனைப் பொறுத்த அளவில் எப்படி சுட்டாவது காரியமானால் சரி. அதாவது தமிழ் சமூகம் என்ற கூட்டு உடைந்து சின்னாபின்னமாகி போனால் சரி. அதற்கான பணிகள்தான் இப்போது ஆரம்பமாகி இருக்கின்றது.யாழ்ப்பாணத்தில் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காக பாலியல் படங்கள் காண்பிக்கப்படும் சினிமாக்களும், கொலை, கொள்ளை , கற்பளிப்புக்களும் அரங்கேற்றப்படுகின்றன. மட்டக்களப்பு ,அம்பாறை,திருகோணமலைப் பகுதியிலோ கருணா என்ற கருநாகத்தை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதற்கு நீங்களும் ஆமாப் போட்டு கருத்து எழுதுகிறீர்கள். தவறான கருத்துக்கள் எங்கு இருக்கு மென்று தேடிப்பிடிக்கிறீர்கள்.
சர்வதேச சமூகம் எங்கள் மீது அக்கறையிலா சமாதானத்துக்கு உதவுகிறார்கள். அவர்கள் தங்கள் நன்மைக்காக தான் இதனை மேற்கொள்கிறார்கள். கருணாவின் பிரச்சனையில் அமெரிக்காவோ, பிரிட்டனோ, இந்தியாவோ சம்பந்தப்படவில்லை என்று ஆதாரத்துடன் கூறுங்கள் பார்ப்போம். அவர்கள் தான் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையையும் கிள்ளி விடுபவர்கள். புலிகள் அவ்வாறு அல்ல புலிகளுக்கு என்று ஒரு சட்டம், நேர்மை, கண்ணியம், ஒழுக்கம், இருக்கின்றது. அதனை மீறுபவர்கள் தண்டிக்கப் படுவார்கள். இவ்வாறு எல்லா இராணுவங்களிலும் உண்டு. இந்தியாவின் றோ அமைப்பில் அமெரிக்காவுக்காக வேலை செய்தவருக்கு அமெரிக்காவே அடைக்கலம் கொடுத்திருக்கிறது . இதற்கு றோ கூறியிருக்கிறது அவரை அங்கு வைத்தே சுட்டுக் கொல்வோம் என்று. அவரும் 20 வருடங்கள் அவ்வமைப்புடன் செயற்பட்டவர் தான். அவ்வாறு தான் கருணாவும் ஒரு தனிமனிதன் தன் சுயநலத்துக்காய் எதிரியுடன் சேர்ந்து என்னவெல்லாமோ சொல்கிறார் சொல்லட்டும். அவருக்கு தெரியும் தான் செய்வது பெரிய துரோகம் என்று. ஆனால் அது தெரியாமல் நீங்கள் இங்கு புலம்புகிறீர்கள். அவருக்கு வக்காலத்து வாங்கு கிறீர்கள். அவரின் செயல்களை நியாயப்படுத்த முயல்கிறீர்கள். இது தமிழ் மக்களையே நீங்கள் எதிர்ப்பது போல் இருக்கிறது.
ஒரு சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். இது நீங்கள் அறிந்ததும் கூட.......
அமெரிக்காவும், கனடாவும் அருகருகே அமைந்திருக்கும் நட்புநாடு. அப்படி இருந்தும் யூன்27 அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.
இது தான் அமெரிக்கர்களின் நியாயம். இதைத்தான் எம் நாட்டு பேரின வாதிகளும் பின்பற்றுகிறார்கள். அவர்கள் செய்தால் எதுவும்குற்றமில்லை, நாங்கள் செய்தால் தான் குற்றமா :?: நண்பனுக்கே நியாயம் கிடைக்காத கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எங்களை துக்கி வைத்து சீராட்டி தாலாட்டி வளர்ப்பார்கள் என்று ஏன்தான் பகல்கனவு காண்கிறீர்கள். நீங்கள் தான் காண்கிறீர்கள் என்றால் ஏன் ஒன்றுமே புரியாது இருக்கின்ற மக்களை குழப்புவதற்கு முயற்சிக்கிறீர்கள். இதெல்லாம் உங்ளுக்கு எங்கு புரியப்போகின்றது.இவ்வளவுகாலமும் புரியாதது இனி எங்கே :?:
நன்றி
ஆயுதத்தை எடுக்கமுன் என்ன நடந்தது என்பதையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.
இது எனது அதாங்கம்.... ஏதாவது தவறிருந்தால் மன்னிக்கவும்.
[b][size=18]

