07-12-2003, 11:51 AM
இல்லை நிச்சயமாக அழித்தார்கள் என்பது தான் சரி. தன் கண் முன்னே தந்தையை தாயை தன் சோதர சோதரியரை தன் அண்டைவீட்டை அழித்த அந்த அசுரர்களை அழிக்கவே அவர்கள் தம்மை அழித்தார்கள். நிச்சயமாய் யாரும் தூண்டிவிட்டு இவர்கள் புகழ் மமதையிலோ பணவாசையிலோ தம்மை அர்ப்பணிக்கவில்லை. அநியாயம் எது நியாயம் எது என்று புரியாமல் முடிச்சுப் போடுபவர்களுடன் நியாம் பேச முடியாது. ஏனேனில் இவர்கள் பார்வையே வித்தியாசமானது. இவர்களின் எண்ணங்கள் விஷமானது. இவர்கள் தம்மைத்தாமே கொச்சைப்படுத்துவதுடன் இனமானம் காத்த எம் தவப் புதல்வர்களையும் கொச்சைப்படுத்த முயல்கின்றார்கள். நியாயத்தின் பால் உங்கள் பார்வைகள் படியட்டும். உண்மையின் பால் உங்கள் மனங்கள் படியட்டும். நிஜம அப்போது புரியும். பாதுகாப்பான இடத்திலிருந்து கொண்டு இவர்களைக் கொச்சைப்படுத்தவல்ல பேசக் கூட இவர்களுக்கு உரிமை இல்ல. இவர்களுக்குமட்டுமல்ல எமக்கும் தான். அநியாயங்களைக் கண்டு ஒதுங்கி வந்து வசதியாயமர்ந்து கொண்டு இவர்களை போற்றுவது கூட அவர்களுக்குச் செய்யும் இழிவு என்பதே தாழ்மையான எனதெண்ணம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

