07-02-2004, 11:33 AM
Mathivathanan Wrote:எந்தப் பொத்துக்கிள்ளை எந்தப் பாம்பிருக்கெண்டு யாருக்குத் தெரியும்..? அங்கை இருக்கிற மக்களுக்குத்தான் தெரியும்..
பள்ளிக்கூடப் பிள்ளையளுக்கு நிச்சயமாத் தெரியாது..
<span style='font-size:25pt;line-height:100%'>குறியீடுகள் அகற்றப்படுவதால்
மிதிவெடிகள் அகற்றும் பணி பாதிப்பு </span>
யாழ். குடாநாட்டில் மிதிவெடிகள் அகற்றும் பணி இடம்பெறும் பகுதிகளை அடையாளப்படுத்தக் கட்டப் படும் அடையாளப்பட்டிகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகளை விசமிகள் சேதமாக்கியும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர். இதனால் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள் ளனர்.
மிதிவெடி அகற்றும் பணிகள் யாழ். குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன.
மிதிவெடி அகற்றப்பட்ட பகுதியை மிதிவெடி அகற்றப்படாத பகுதியிலி ருந்து வேறுபடுத்துவதற்காகப் பட்டி கள் மற்றும் குறியீடுகள் வைக்கப்ப டுகின்றன. இவற்றை விசமிகள் யாருமற்ற நேரத்தில் அகற்றி விடுகின் றனர். இதனால் மிதிவெடி அகற்றப் பட்ட பகுதியில் மீண்டும் மிதிவெடி அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் வீணான காலதாம தங்கள் ஏற்படுகின்றன.
நன்றி உதயன்
Truth 'll prevail

