07-01-2004, 12:40 PM
<b>அவலம் போகும் புலம்பெயர்ந்தவர்களின் பணம்!
அதுவே தமிழருக்கு ஆப்பாக மாறுகின்ற அவலம்!</b>
போரினால் வட கிழக்கில் இருந்து உயிருக்கு அஞ்சிப் பலர் வெளிநாடுகளுக்கு சென்றனர். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தொழில் வாய்ப்புக்களை நாடி இன்னுமொரு பகுதியினர் புலம்பெயர்ந்தனர். அண்மைக்காலங்களில் தாய், தகப்பன், மனைவி, பிள்ளைகள், அண்ணன், தம்பி எனவரும் உறவுமுறைகளால் மூன்றாவது தடவையாகவும் மக்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
தாய் நாட்டில் இருந்து வௌ;வேறு காலப்பகுதிகளிலும் புலம் பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வாழ்ந்த வாழ்வை எண்ணி தொடர்ந்தும் தாயகத்தில் இருக்கும் தமது உறவுகளுக்காக பெருந்தொகையான பணத்தை வாரிவாரி வழங்குகிறார்கள். புலம்பெயர்ந்த எம்மக்களில் அனேகர் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்களாக, வசதி வாய்ப்புகளில் மன ஆறுதல்களைப் பெறாதவர்களாக தமது எண்ணங்களை தாயகத்தை நோக்கி திருப்புவது அவர்களுடன் உரையாடும் போது உணரக்கூடியதாக இருந்தது.
புலம்பெயர்ந்த மக்களின் மனமாற்றங்களை பலவீனமாக கருதுவதாகவே குடாநாட்டில் இருப்பவர்கள் சிலரின் செயல்கள் மூலம் எண்ணத்தோன்றுகின்றது.
மற்றைய மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாத அதிதீவிர சுயநலவாதிகளாக இந்த மக்களை மாற்றியது எது?
குடாநாட்டு மக்களின் போக்கை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருப்பது எது?
குடாநாட்டு மக்களை மாற்றுவதால், இம் மாற்றங்களை செய்பவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கின்றது?
தமிழர்களின் பலவீனங்களை தமிழர்களுக்கு எதிரான அரசியலாக்கப்படுவதை அப்பாவி புலம் பெயர்ந்தவர்களும், அவர்களின் உறவினர்களும் அறிவார்களா?
குடாநாட்டில் இடம்பெறும் எல்லா வகையான துன்பங்களுக்கும் தமிழர் விடுதலையை, தமிழரின் சுதந்திர தாயகத்தை விரும்பாதவர்களின் மறைமுக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டிருப்பதை அறிவார்களா?
எல்லோரும் உலகியல் உண்மையை அறியுங்கள், அதன் மூலம் இந்த பிரபஞ்ச இயக்கத்தின் உண்மையை அறியலாம். ஒவ்வொருவருக்கும் தேடல் இருந்தால் மட்டுமே இந்த உலகில் எங்களை நாம் தற்பாதுகாத்துக் கொள்ள முடியும்!
குடாநாட்டில் முதன் முதல் தன்னுடைய தம்பிக்கோ அல்லது தங்கைக்கோ மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தவர் ஒரு நல்ல சிந்தனையின் முடிவாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது வெளிநாட்டில் இருக்கும் அண்ணன் குடாநாட்டில் இருக்கும் தனது உறவுகள் எவரும் கஷ்டப்படக்கூடாது என எண்ணியே மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருப்பார்!
ஆனால் இன்று மோட்டார் சைக்கிள் என்பது எல்லா இளைஞர் யுவதிகளுக்கும் (வேலைக்கு போகின்றவர்கள், வேலைக்குப் போகாதவர்கள் என எல்லோருக்கும்) அத்தியாவசியமாகி விட்டது. வேலைக்குப் போகின்றவர்களால் மக்களுக்கோ அல்லது அவர்களுக்கோ எந்தப்பாதிப்பும் இல்லை. ஆனால் சாதாரணமாக வேலைக்குப் போகாத பாடசாலை மாணவர்கள், சந்திகளில் வேலையற்று இருப்பவர்கள் போன்றோரிடம் காணப்படும் மோட்டார் சைக்கிள்கள் அவர்களுடைய எண்ணங்களில், நடத்தைகளில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. (இதற்கு தென்னிந்திய திரைப்படங்கள் அதிகளவில் துணை புரிகின்றன) குழு மோதல்கள், தனியாக செல்லும் பெண்களுடன் சேட்டைகள் செய்தல், தங்களுடன் முரண்படும் நபர்களை குழுவாகச் சென்று தாக்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவர்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்படுத்தும் தொடர்பு இவர்களுக்கு வாய்ப்பாக உளாPதியான பாதுகாப்பையும், உத்வேகத்தையும் கொடுக்கின்றன. மிகத் தந்திரமாக இவ்வாறானவர்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகளால் சமுதாயத்தில் இலகுவில் ஊறுவிளைவிக்க முடிகின்றது.
குடாநாட்டில் நடக்கும் பாரிய சீரழிவுகளைத் தடுப்பதற்கு முதற்கட்டமாக தேவையற்ற விதத்தில் மாணவர்களின் கைகளில் பணம் புரள்வதைப் பெற்றோர்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். (வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்களின் உறவினர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு, அவர்களின் தேவைக்கு அதிகமாக பணத்தை கைகளில் அள்ளி வழங்குகின்றனர்.)
மாணவர் கைகளில் காணப்படும் பணப் புழக்கம், சமூகத்தை சீரழிப்பவர்களுக்கு மிகவும் வாய்ப்பாக இருக்கின்றது. அதாவது அந்த மாணவர்களுக்கு கவரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் எந்த வகையிலாவது பணம் சம்பாதிக்க அலையும் நம்மவர்களுடாக, மாணவர்களின் கைகளில் கிடைக்க வழி செய்கின்றார்கள்.
மோட்டார் சைக்கிள் விடயம் சாதாரண குடும்பங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆராய்ந்தால், குடாநாட்டில் சில குடும்பங்களுக்கு நேரடியாக வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைப்பதில்லை. அவர்கள் சாதாரண அரச உத்தியோகத்தர் ஆகவோ அல்லது விவசாயம் செய்பவர் ஆகவோ இருக்கும் பட்சத்தில் தங்களிடம் இருக்கும் பொன்னையோ பொருளையோ விற்றுத் தங்கள் பிள்ளைகளின் தேவையை புூர்த்தி செய்துகொள்கிறார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் பல குடும்பங்களில் உள்ள இளைஞர், யுவதிகள் களவு பாலியல் துர்நடத்தை போன்ற சமூக சீரழிவான செயல்களில் ஈடுபடுவதையும் குடாநாட்டில் காணக்கூடியதாக இருக்கின்றது.
பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் சாதாரண மக்களை தடம் புரளச் செய்வதை தடுக்கமுடியாது. தடம்புரள்வை நிறைவான கல்வி அதனு}டான சிந்தனை மூலமே வெற்றிகொள்ள முடியும்.
நன்றி யாழ்குரு - தமிழ்நாதம்
----------------------------------
தாத்தா, கந்தர் இரண்டுபேரும் பணம் பணம் என்று புலம்புறது.....என்ன சதிகளுக்கு என்று இப்பதானே விளங்குது.. :wink: