07-01-2004, 12:34 PM
<b>கருணாவைப் பகடைக்காயாக்கி ஜனாதிபதி சந்திரிகா சூதாட்டம் - ஐ.தே.கட்சி </b>
[ யாழ். உதயன் ] [ வியாழக்கிழமை, 01 யுூலை 2004, 8:33 ஈழம் ]
தனது பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியாத அரசு கருணாவை பகடைக்காயாகப் பயன்படுத்தி புதிய சூதாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது என ஐக்கிய தேசியக்கட்சி துணைப்பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றுக்காலை ஐ.தே.க. தலைமையகமான சிறீகோத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு தெரிவித்ததாவது:
ஜனாதிபதி சந்திரிகா சமாதானப் பேச்சை ஆரம்பிப்பதுபோல பம்மாத்துக் காட்டுகின்றார். நாட்டு மக்களை மட்டுமன்றி நோர்வே அனுசரணையாளர்களையும் அவர் ஏமாற்றி வருகின்றார்.
உள்வீட்டுச் சிக்கல்களைத் தீர்க்க முடியாத அரசாங்கம் இப்போது தமிழ் மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள கருணாவை வைத்துக்கொண்டு புதிய சூதாட்டத்தில் இறங்கி மக்களைத் திசை திருப்ப முனைகின்றது.
கருணா எங்கே இருக்கிறார் என்பது அரசுக்குத் தெரியாது என்கிறார்கள். ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவோ கருணாவுடன் தொடர்பு வைத்துள்ளார், பேசுகின்றார். அப்படியானால் தேடப்பட்டு வரும் தீவிரவாதி ஒருவருடன் அமைச்சர் ஒருவர் தொடர்பு வைத்துள்ளார். அதனை அரசுக்கும் மறைக்கின்றார் என்றால் அதே அமைச்சருக்கு எதிராக இந்த அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அது அவர்களால் முடியாது. காரணம் அவர்கள் கருணாவைத்துக் கொண்டே காலம் கடத்தப்பார்க்கின்றனர்.
அவர்களுடைய ஆட்சியில் ஒரு போதும் சமாதானப்பேச்சு இடம்பெற மாட்டாது என மேலும் அவர் அங்கு தெரிவித்தார்.
நன்றி புதினம்