06-30-2004, 06:52 PM
<b>ஜனாதிபதியோ அரசாங்கமோ இதுவரை எதனையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை: </b><i>தமிழ்ச்செல்வன்</i>
[ வன்னியிலிருந்து கிருபா ] [ புதன்கிழமை, 30 யுூன் 2004, 18:27 ஈழம் ]
இடைக்கால நிர்வாக தன்னாட்சி அதிகார சபை ஒன்றை உருவாக்குதற்கான அடிப்படையில் இருந்தே சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதியோ அரசாங்கமோ இதுவரை நோர்வேத் தரப்பிற்கு அதிகாரபூர்வமாக அறிவிக்வி;ல்லையென தமிழீழ விடுதலைப்லிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்
சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை மீதுள்ள அதிருப்தியை நோர்வேத் து}துக்குழுவிற்கு இன்று தெரியப்படுத்தியுள்ளோம். பேச்சுக்களை ஆரம்பிப்பது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது என்று தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
விமானப்படைக்கு சொந்தமான விசேட உலங்குவானு}ர்தி மூலம் காலை 10 மணிக்கு கிளிநொச்சி வந்தடைந்த நோர்வே அனுசரணையாளர் குழுவினர் காலை 11.00 மணியளவில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை அரசியல் துறை நடுவப்பணியகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பானது இரண்டு மணிநேரம் நடைபெற்றது. விடுதலைப்புலிகளின் தரப்பில் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவில் இணைக்கப்பட்ட காவல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன,; சமாதானச் செயலகப் பணிப்பாளர் திரு.புலித்தேவன் ஆகியோர் பங்குபற்றினர்.
நோர்வே அனுசரணையாளர் தரப்பில் திரு.எரிக் சொல்ஹெய்ம், சிறிலங்காவிற்கான நோர்வேத் து}துவர் திரு.ஹான்ஸ் பிரஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் வழங்கிய பதில்கள் வருமாறு:-
கருணாவை வைத்துக்கொண்டு சமாதான முயற்சிகளையும் யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் குழப்புவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் அவர் உருவாக்கிய புதிய நெருக்கடியை அரசாங்கமே முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதனை இச்சந்திப்பின் மூலம் நோர்வே அனுசரணையாளர் ஊடாக தெரிவித்திருக்கிறோம்.
ஏந்த அடிப்படையில் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க புலிகள் தயாராக இருக்கின்றார்கள் என்பதை ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாடு தெளிவானதும் உறுதியானதும் அவ்வப்போது ஊடகங்கள் மூலமாகவும் தெளிவுபடுத்தி வருகின்றோம் ஆகவே பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான முழுப்பொறுப்பும் அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.
நோர்வே அனுசரணையாளர்கள் அதனை விளங்கிக்கொண்டிருக்கின்றார்கள், சர்வதேச சமூகம் விளங்கிக் கொண்டிருக்கின்றது. எங்களைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்திகளையே இன்று நோர்வேயிடம் வெளிப்படுத்தி இருக்கின்றோம். ஆகவே சமாதான முன்னெடுப்பு நடவடிக்கையில் மாற்றங்கள் வரவேண்டும். முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தால் கருணாவை வைத்துக்கொண்டு அங்கே அந்த சமாதான முன்னெடுப்புக்களும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். இதனை நோர்வேக்கு நாங்கள் தெரிவித்திருக்கின்றோம்.
சமாதான முன்னெடுப்புக்களை தொடர்வதாக இருந்தால் ஏற்கனவே நாங்கள் நோர்வே ஊடாக தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் அதில் மாற்றம் இருக்காது.
நன்கொடையாளர்களுக்கு தெளிவாக கூறியிருக்கின்றோம். எமது தாயகப் பிரதேசத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்திலே முன்னெடுக்கப்படுகின்ற எந்த புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்துமே உருவாக்கப்படப் போகின்ற இடைக்கால நிர்வாகம் என்ற கட்டமைப்பிற்கு ஊடகவே மேற்கொள்ளப்பட வேண்டும் அதனை தீர்க்கமாக நோர்வேக்கு கூறியிருக்கின்றோம்.
பலவீனமடைந்துள்ள இலங்கை அரசாங்கத்தி;ன் மூலமாக எமது பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் புலிகளும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இதனை நன்கொடையாளர்களுக்கும் நோர்வேத்தரப்பி;ற்கும் தெரியப்படு;த்தியுள்ளோம்.
நன்றி புதினம்