06-29-2004, 10:15 PM
<b>கனடாவில் மீண்டும் லிபரல் ஆட்சி - போட்டியிட்ட ஒரே தமிழ் வேட்பாளர் தோல்வி - தேர்தல் முடிவுகள் </b>
ஜ ராகினி, சங்கீத் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 29 யுூன் 2004, 18:52 ஈழம் ஸ
பரப்பளவில் உலகில் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் 34வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது 168 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெருன்பான்மை கட்சியாக பாராளுமன்றத்தில் ஆட்சிபுரிந்த லிபரல் கட்சி, தனது பெருன்பான்மைப் பலத்தைத் இழந்துள்ளது. இருந்தபோதிலும் 135 ஆசனங்களுடன் சிறுபான்மை அரசமைக்கும் வெற்றியை லிபரல்கட்சி பெற்றுள்ளது.
308 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் இறுதிப் பகிர்வுகள் இவ்வாறு அமைந்திருந்தன.
லிபரல் கட்சி 135 - 36.71 சதவீதமான ஆதரவு வாக்குக்கள்
பழமைவாதக் கட்சி 99 - 29.61 சதவீதமான ஆதரவு வாக்குக்கள்
பாட்டி கியுூபெக்குவா 54 - 12.4 சதவீதமான ஆதரவு வாக்குக்கள்
புதிய மக்களாட்சிக் கட்சி 19 - 15.69 சதவீதமான ஆதரவு வாக்குக்கள்
சுயேட்சை 1 - 0.13 சதவீதமான ஆதரவு வாக்குகள்
இந்நிலையில் புதிய மக்களாட்சிக் கட்சியுடன் இணைந்து லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் என கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் மக்கள் நிறைந்து வாழும் ஒன்ராரியோ மாகாணத்தின்; மேற்கு டொன்வலி தொகுதியில் புதிய மக்களாட்சிக் கட்சிசார்ப்பில் டேவிட் தோமஸ் என்ற ஈழத் தமிழர் முதல் தடவையாக போட்டியிட்ட போதிலும் அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகத் தவறியுள்ளாh.;
<b>
பல்லினச் சமூகங்கள் மிக அதிகமாக வாழும் கனடிய மண்ணில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் மிகவும் அதிகமாக புலம்பெயர் வாழ் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதற்கான காரணம் குடிவரவாளர்கள் பெருமளவில் வருடாவருடம் வந்தடையும் கனடாவில், குடிவரவாளர்களின் வருகையையும் வசதிகளையும் கட்டுப்படுத்தக் கங்கணம் கட்டிநின்ற பழமைவாதக் கட்சி (கன்சவ்வேர்ட்டிவ் கட்சி) வெற்றிபெறக்கூடிய வாய்ப்பொன்றை உருவாக்கியிருந்ததே. </b>
மிகவும் பலமான அணியாக, அமோக வெற்றிவாய்ப்பை எதிர்பார்த்து தேர்தல் அறிவிப்பை விடுத்த ஆளும் கட்சியின் தலைவரும் கனடிய பிரதம மந்திரியுமான போல் மார்ட்டீன், தேர்தல் அறிவித்தலை விடுத்த ஒரு சில நாட்களிலேயே பலத்த குற்றச்சாட்டுக்களில் சிக்கிக் கொண்டு, லிபரல் கட்சியின் செல்வாக்கு மடுவுக்குள் சரிவதைக் கண்டும் எதுவும் செய்யமுடியாது திண்டாடினார்.
வரவுசெலவுத் திட்டம் சரியாக அமைக்கப்படவில்லை, தனக்குச் சொந்தமான பல கப்பல்களை கனடாவுக்கு வெளியே வேற்று நாட்டுக் கொடியின்கீழ் செயற்பட அனுமதித்ததன் மூலம் கனடிய நாட்டுக்கு வரி கட்டாது தவிர்த்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் அடுத்தடுத்து போல் மார்ட்டீன் மீது சுமத்தப்பட்டதால், லிபரல் கட்சியின் செல்வாக்கு சடுதியாகச் சரிந்து, கன்சவ்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு உயர ஆரம்பித்தது.
கன்சவ்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பாகி விடலாம் என்பதால், பல நாடுகளிலும் இருந்து வந்து குடியேறிய புலம்பெயர் மக்கள் தங்களது ஆதரவை முழுமையாக வழங்கியதன் மூலம் லிபரல் கட்சியின் தோல்வியை இறுதி நேரத்தில் தவிர்க்க உதவியுள்ளார்கள்.
பல்லினத்தவர்கள் மிக அதிகமாக வாழும் ஒன்ராரியோவிலேயே லிபரல் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏனைய அனைத்து மாகாணங்களிலும், லிபரல் கட்சி பலத்த எதிர்ப்பையே சம்பாதித்துள்ளது. குறிப்பாக, பிரிவினை கோரும் கியுூபெக் மாகாணத்தில் லிபரலுக்கு கடும் தோல்வியே கிடைத்துள்ளது.
பல்லின சமூகத்திற்கு மிக அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு உறுதி வழங்கிய புதிய ஜனநாயகக் கட்சியுடன், ஏற்கனவே பல்லின மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஆளும் லிபரல் கட்சி கூட்டணி அமைப்பதன் மூலம், குடிவரவாளர்களுக்கான அழுத்தங்களும் சிரமங்களும் அதிகரிக்க வாய்ப்பில்லை என்பது மிகவும் ஆறுதல் தரும் விடயமாகும்.
இப்போது பெற்றுள்ள வெற்றி மூலம் லிபரல் கட்சி தொடர்ந்து நான்கு தடவைகள் கனடாவை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்களிடமிருந்து பெற்றுள்ளார்கள். கடந்த மூன்று தேர்தல்களிலும் லிபரல் கட்சியே பெரும்பான்மை வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் ஜீன் கிரைச்சியன் தலைமையில் ஆட்சி செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி
புதினம் இணையத்தளம்
http://www.eelampage.com/index.shtml?id=20...91852485455&in=

[b][size=18]