06-29-2004, 12:32 AM
கேணல் பஸீர் வாலி முகம்மது. பாகிஸ்தான் இராணுவத்தில் கேணலாக இருந்தவர் பாகிஸ்தானின் சிவில் சேவைக்கு வருவதற்கு முன்னர் பாகிஸ்தானின் உளவுப் பிரிவுக்கு தலைமை அதிபதியாக இருந்திருக்கிறார். இந்த உளவுத்துறை அனுபவத்தை பயன்படுத்தி பாகிஸ்தானின் இன்டர் சேர்விசஸ் இன்டலிஜன்ஸ் என்ற ஐஎஸ்ஐ உளவுப்படை மூலம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் இளைஞர்களை ராணுவ மயப்படுத்தி ஒரு கிளர்ச்சிக்கு அவர்களை து}ண்டிவிடக் கூடும் என்ற ஒரு அச்சம் இந்தியாவிலுள்ள ஒரு சிலருக்கு இருக்கிறது முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ராணுவ வேகம் தலை து}க்கினால் அது இந்தியாவின் நலனுக்கு பெரும் பாதிப்பாகிவிடும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
இதனால்தான் இவரது நியமனம் இந்தியாவில் ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.இந்திய சிவில் சேவையைச் சேர்ந்த பி. இராமன் என்பவர்தான் தேவை இல்லாத இந்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இவர் ஒரு முன்னாள் இந்தியாவின் உளவுப்படையான "ரோ' வின் தாசர். பாகிஸ்தானின் இந்த ஐஎஸ்ஐ உளவுப் படையைத்தான். அமெரிக்காவின் உளவுப்படையான சிஐஏ ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த ரஷ்யாவுக்கு எதிரான உள்ளூர்போராட்டத்துக்கு வேண்டிய நிதி உதவிகளையும் மற்றும் ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு பயன்படுத்தி வந்தது. 1979 முதல் 89 வரை ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் நடந்ததது;. 89 இல் ரஷ்ய படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்னர் ஐஎஸ்ஐ உளவுப்படை மூலம் ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கு உதவுவதை அமெரிக்கா நிறுத்திக்கொண்டு விட்டது. ஆக்கம் சேது