Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை பற்றி...!
#1
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/dranor.gif' border='0' alt='user posted image'>

<b>என்னை பற்றி</b>

என் பெயரோ தமிழினி!
பிறந்ததோ {யாழ் நகரில்} ஓரு சிறு கிராமத்தில்.
உறவினர் என்று யாரும் இலர்.
நண்பர் என சிலர் உலர்.

பிடித்தது வறுமையில் சிரிப்பு
வெறுப்பது துரோகங்கள்.
நம்புவது என்னை மட்டும்
நினைப்பது நல்லவயை
நடப்பவை நினைக்காதவை

கற்றது எழுத படிக்க
கற்க நினைப்பது உலகை.
மகிழ்வது கனவில்
வாழ்வது கற்பனையில்
மறக்க நினைப்பது சோக வரலாறு
மறக்க முடியாதது தோல்விகளை
நடக்க முடியாதது முயற்சி செய்யாதவை
சாதிக்க இருப்பது ரகசியம்.

விரும்பும் இடம் என் தாய் நிலம்.
வாழ்வில் சந்திக்க விரும்புவது என்னை போல் இன்னொருவரை
வேண்டுவதெல்லாம்
சுதந்திரமாய் என் தாய் நிலத்தில் மரணம்.

http://www.tamilini.blogspot.com/

----------------------------------

ஏன் தமிழினி யாழ் கள உறவுகள் நாம் உங்கள் உறவுகள் தானே பிறகேன் உறவுகள் இல்லை என்றீர்கள்....???!

உங்களுக்குள்ளும் ஏதோ ஒரு சோகம் புதைந்திருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது... நீங்கள் தேடும் உங்களைப் போன்றவர் கிடைத்து நீங்கள் உங்கள் சோகங்கள் கலைத்து என்றும் மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழ்ந்திருக்க இறைவனை வேண்டுகின்றோம்...!

உங்களையே நம்பும் உங்கள் குணம் நீங்கள் உறுதியாய் இருப்பீர்கள் என்பதையும்... உங்கள் பலம் பலவீனத்தை எடை போட்டுக் கொண்டு உங்களை நீங்களே நன்கு வழிநடத்துவீர்கள் என்பதையும் பறைசாற்றுகிறது...எனவே சோகங்கள் மறந்து... வாழும் வயதில் தீமைகள் தழுவாது நன்மைகளோடு வாழ என்றும் விளைந்திருங்கள்....!

நீங்கள் ஒருதடவை குருவிகளைப் பார்த்துக் கேட்டீர்கள் ஏன் வாழ்க்கை வெறுத்துப் போனவர் போல் பேசுகிறீர்கள் என்று....அதன் பொருள் இன்று அறிந்தோம்...! நாம் எம்முள் பலரையும் காண வேண்டும் என்று வாழ நினைப்பவர்கள்.... மற்றவர்களின் உணர்வுகளின் ஓட்டம் அறிந்து அவர்களோடு அவர்களின் மகிழ்விற்காய், நல்ல மனமாற்றத்திற்காய் நல்ல மனித உறவுகளாய் வாழ விரும்புபவர்கள்....அதற்காய் இலட்சியம் வகுத்தவர்கள்....!ஆனால் எம் நிலை உணரும் மனிதர்கள் மிக சொற்பம் என்பதே இக்குறுகிய வாழ்நாளில் கண்ட உண்மை....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
என்னை பற்றி...! - by kuruvikal - 06-28-2004, 05:34 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 06:54 PM
[No subject] - by shanmuhi - 06-28-2004, 08:54 PM
[No subject] - by AJeevan - 06-28-2004, 09:33 PM
[No subject] - by tamilini - 06-28-2004, 09:38 PM
[No subject] - by kavithan - 06-28-2004, 11:50 PM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 07:50 AM
[No subject] - by tamilini - 06-29-2004, 12:15 PM
[No subject] - by tamilini - 06-29-2004, 12:17 PM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 06:15 PM
[No subject] - by Mathivathanan - 06-29-2004, 06:22 PM
[No subject] - by tamilini - 06-29-2004, 06:25 PM
[No subject] - by kuruvikal - 06-29-2004, 06:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)