06-28-2004, 04:35 PM
எதிர்கால சமாதான முன்னெடுப்புக்கள் அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன்
நாட்டின் எதிர்கால சமாதான முயற்சிகள் அரசாங்கத்தினதும், படைத்தரப்பினதும் கைகளிலேயே தங்கியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்றொன் புறு}வ் ஹொவ்டேயுடனான இன்றைய சந்திப்பின்போதே தமிழ்ச்செல்வன் இதனை வலியுறுத்தியிருக்கின்றார்.
யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ட்றொன் புறு}வ் ஹொவ்டேக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற சந்திப்பினை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்றொன் புறு}வ் ஹொவ்டே தலைமையிலான பிரதிநிதிகள் நால்வரும், விடுதலைப் புலிகளின் சார்பில் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>