06-28-2004, 04:33 PM
தமிழீழ தேசியப் படையில் இiணைபவர்களுக்கு படைத்துறை பயிற்சி உள்ளிட்ட விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
தமிழீழத் தேசியப் படையில் இணைபவர்களுக்கு படைத்துறைப் பயிற்சி உள்ளிட்ட விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தேசவிரோத சக்திகளின் ஊடுருவல் இடம்பெறலாம் என்ற அடிப்படையில் மிகவும் அவதானமாகவே தமிழீழத் தேசியப் படைக்கான ஆட்சேரப்பு நடவடிக்;கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழத் தேசியப் படைக்கான இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 300 பேர் இணைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு தெரிவித்துள்ள நடேசன்,
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராடுவதற்கு ஏற்றவகையில் ஆறு மாதகால விசேட படைத்துறைப் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்புதிய திட்டத்தின் கீழ் சுமார் 1,500 தேசியப் படைவீரர்கள் உருவாக்கப்படவுள்ளதோடு, இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவாக 8,500 ரூபா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>