06-28-2004, 02:31 PM
உவர் வல்லையார் பிழையாச் சொல்லுறார்...எங்கட அனுபவத்தில சொல்ல வந்தா.... போர் காலத்தில உங்க யாழ்ப்பாணத்தில சினிமா கினிமா எண்டு எல்லாம் நிண்டு போன காலத்தில கோயில் திருவிழாவுக்கு வில்லிசைப்பாட்டு நிகழ்ச்சி நடத்துவினம்.... குருவிகள் அப்ப குஞ்சா இருக்கேக்க அங்கால கூட்டுக்கால எட்டிப்பாக்குங்கள்.... நல்லாத்தான் இருந்தது போராட்ட நிகழ்வுகள் சொல்லும் வில்லுப்பாட்டுகள்... இப்பவும் அதுகள் தானே தகவல் ஊற்றா இருந்து பழுத்த அரசியல் கிறுக்குகளோடவும் அரசியல் எண்டு பேச கொஞ்சம் எண்டாலும் உதவுது...ஆனா இப்ப சினிமா கினிமா...மினி முனி... சற்றலைற் சனல்... சன் சனல் எண்டு வெட்டியாப் பொழுதுபோக்க ஆயிரம் இருக்கேக்க சனம் எங்க வில்லிசையில காது கொடுத்துக் கேக்கப் போகுதுகள்...அதுக்காக வில்லிசையை குறை சொல்லுறது சரியில்ல.....என்ன சனத்தின்ர பார்வை சிந்தனை நோக்கம் தேவை எல்லாம் விரைவா மாறிக் கொண்டு வருகுது எண்டதுதான் இங்க கவனிக்க வேண்டிய விசயம்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

