07-11-2003, 10:46 AM
வணக்கம் நண்பர்களே...
இன்றைய உலகில் வழமையான அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, உறையுளுடன்
புதிதாகச் சேர்ந்திருப்பது தகவல் மற்றும் தொடர்பூடகங்களாகும். அதன் அடிப்படையில்
இன்று அனைவருக்கும் அவசியத் தேவையாகி வளர்ந்துவருவது கணணியும், இணையமும்
ஆகும். புலம் பெயர்ந்து வாழும் மண்ணில் பொதுவாக தமிழர்கள் அனைவரும் கணணி
வைத்திருக்கிறார்கள். பெற்றோர்கள் தமக்காக அல்லாவிடினும், படிக்கின்ற தமது
பிள்ளைகளிற்காக ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்கள். கணணி பற்றிய அறிவில்லாவிட்டாலும்
கூட, தற்பெருமைக்காக வாங்கி வைத்திருப்பவர்கள் சிலர். "அந்த வீட்டில் இருக்கிறது" நமது
வீட்டில் இருந்தால் என்ன?" என்ற போட்டியோடு வாங்கி வைத்திருப்பவர்கள் சிலர். அதே போல்
தான் இணையமும். இணையத்தை தகவற் களமாக அல்லது தொடர்பூடகமாகப் பயன்-
படுத்துகிறார்களோ இல்லையோ அது வேறு விடயம். மொத்தத்தில் கணணி வைத்திருப்பவர்களும்
இணைய இணைப்பு உள்ளவர்களும் அிதிகமாகி வருகிறார்கள் என்பது உண்மை.
எனவே இணையம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதுபற்றிய சந்தேகங்களைத் தெளிவு
படுத்திக் கொள்ளவும், புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், ஏற்படும் பிரச்சினைகளிற்கான
தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் வசதியான முறையில் யாழ் கருத்துக் களத்தில் இந்த இணையம்
பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நண்பர்களே, இணையத்தில் உங்களிற்கு ஏற்படும் சந்தேகங்கள்,
பிரச்சினைகளை இந்தத் தலைப்பின் கீழ் முன்வையுங்கள். அதற்கான தீர்வுகளும், ஆலோசனைகளும்
இணையத் துறையில் ஆர்வமும், அறிவும் உள்ளவர்களால் வழங்கப்படும்.
[b]கவனத்திற்கு: இணையம் சார்ந்த கேள்விகள் மட்டுமே இங்கு எழுதப்படல் வேண்டும்.
நேரடியாகக் கணணி சார்ந்தவை கணணிப் பகுதிக்குள் எழுதப்படல் வேண்டும்.