06-25-2004, 02:18 PM
கொழும்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பில் கருணா! புலிகளிடம் சரணடைந்தவர்கள் பகிரங்கமாகத் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட கருணா தற்போது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கருணாவுடன் கொழும்புக்குச் சென்று தற்போது விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள நிலாவினி, பிரேமினி, தீந்தமிழ், லாவண்யா ஆகியோர் கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேறிச் சென்றது தொடக்கம் திரும்பிவரும் வரைக்குமிடையிலான சம்பவங்களை ஊடகங்களுக்கு பகிரங்கமாகத் தெரிவித்து வருவதையடுத்து கருணா விவகாரம் பல்வேறு விமர்சனங்களை அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளது.
கருணாவிடமிருந்து வந்து விடுதலைப்புலிகளிடம் சரணடைந்திருப்பவர்களில் ஒருவரான நிலாவினி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:-
கருணாவுக்கு சிறிலங்காப் படைப்புலனாய்வுத் துறையினரே ஆதரவு வழங்கி வருகின்றனர். இதனை எந்த விதத்திலும் அரசு மறுதலிக்க முடியாது.
ஏனெனில் நாங்கள் நால்வரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் பாதுகாப்பிலிருந்தே இங்கு வந்திருக்கிறோம்.
கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேறுவதற்கு முன்பும் சிறிலங்கா இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.
தொப்பிக்கலை பிரதேசத்தில் இருந்து கொழும்பு வீதியை கடந்து வாகரைப் பகுதிக்கு ஆயுதங்களுடன் ஆறு, ஏழு வாகனங்களில் அவர்கள் சென்று வந்தனர்.
அதேவேளை மட்டக்களப்பு நகரில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதத்துடன் கருணாவின் சகாக்கள் நடமாடுவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர் எனக் குறிப்பிட்ட நிலாவினி. ஓமந்தையூடாக மட்டக்களப்பிலிருந்து வன்னி சென்ற விடுதலைப் போராளிகளின் பெயர் விபரங்களையும் ஓமந்தையூடாக திருமலைக்கு சென்ற விடுதலைப்புலி உறுப்பினர்களது பெயர் விபரங்களையும் ஓமந்தையிலுள்ள இராணுவம் பெக்ஸ் மூலம் கருணாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அதேசமயம் மட்டக்களப்பில் நடந்த கொலைகளுக்கும் கருணாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இக்கொலைகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் பல தடவைகள் இராணுவத்திடம் தெரிவித்த போதும் படையினர் மறுத்து வந்தனர்.
ஆனால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அனுமதியுடனேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ள நிலாவினி மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளியேறிச் சென்ற சம்பவம் தொடர்பாகவும் பல இரகசியங்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அதாவது, அலிசாஹிர் மௌலானாவின் வாகனத்தில் சென்ற நாம் ஏப்ரல் 12ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் 22ம் மாடியில் தங்கியிருந்த நாட்களில் அலிசாஹிர் மௌலானாவின் சாரதி உணவு கொண்டு வந்து தருவார். அந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா படைப்புலனாய்வு அதிகாரி அடிக்கடி வந்து போவார் அவர் கருணாவுடன் பேசும் போது கருணாவின் மொழி பெயர்ப்பாளர் வரதன், மெய் பாதுகாப்பாளர் கஸ்ரோ ஆகி யோர் இருந்தனர். டக்ளஸ் தேவானந்தாவும் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். எனக் கூறிய நிலாவினி மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் பற்றி கருணாவுக்கு தொலைபேசியில் அடிக்கடி அறிவிக் கப்பட்டதாகவும் கூறினார்.
இதேவேளை ஹில்டன் ஹோட்டலிலிருந்து நுகேகொடயிலுள்ள வீட்டிற்கு மாற்றப்பட்டதையடுத்து கருணாவின் 3 பிள்ளைகளும் மனைவி வித்தியாபதியும் வெளிநாட்டிலிருந்து அவ்வீட்டிற்கு வந்தனர். எங்களை வீட்டுப் பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுங்கள் வேறு நாடுகளுக்கு செல்வதில் சிரமங்கள் இருப்பதாகவும் கூறி வந்தார்.
பின்னர் இராணுவப் புலனாய்வு பிரிவினர் வந்து கருணாவையும் மனைவி பிள்ளைகளையும் அழைத்து சென்றதாகவும் அதன் பின்பே நாம் தப்பி வந்ததாகவும் நிலாவினி கூறியுள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>