06-25-2004, 10:04 AM
மிலிந்த மொரகொட கருணாவிற்கு லண்டன் விசா பெற்றுக்கொடுத்தார்?
மிலிந்த மொரகொட கருணாவிற்கு லண்டன் விசா பெற்றுக்கொடுத்தார் என அமைச்சரவைப் பேச்சாளரான மங்கள சமரவீரா நேற்றுத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி சமாதானப்பேச்சைக் குழப்பியடிப்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டம் எனவும் கருணா விவகாரத்தில் முக்கிய சூத்திரதாரி ரணில் விக்கிரமசிங்கவே எனவும் தெரிவித்த மங்கள சமரவீரா, ஐக்கிய தேசியக்கட்சியின் இரட்டை வேடம் இப்போது அம்பலமாகிவிட்டது. இவ்விடயத்தில் தொடர்புடைய பாதுகாப்புப் படையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் மீதான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளதோடு,
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியான அலிஸாகிர் மௌலானாவே கருணா குழுவினரைக் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார். கருணா குடும்பத்தினருக்கு மிலிந்த மொறகொட எம்.பி. லண்டன் விசா பெற்றுக்கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட கருணாவின் குடும்பத்தினருக்கு விஸா பெற்றுக்கொடுத் ததாகக் கூறுகிறீர்கள் அப்படியானால் கருணா வெளிநாடு சென்று விட்டாரா?- எனச் செய்தியாளர்கள் கேட்டபோது மேற்கண்ட கூற்றிற்கு மாறாக, கருணா வெளிநாடு செல்லவில்லை. ஆனால், எங்கு இருக்கிறார் என்பது தெரியாது. இவ்விடயம் தொடர்பாக இரகசியப் பொலீஸார் தகவல் திரட்டுகின்றனர் என அமைச்சர் மங்கள குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில், கருணா விவகாரத்தில் இன்றைய அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் சமாதானப் பேச்சு ஆரம்பமாகும். நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் அடுத்த வாரம் மீண்டும் இங்கு வருகிறார் எனவும் தெரிவித்தார்.
மங்கள சமரவீரா இவ்வாறு தெரிவித்த போது, அரசாங்கத்திற்கும் கருணா விவகாரத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறீர்கள், ஆனால். ஜனாதிபதியின் பொறுப்பில் இருக்கும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். கருணாவுக்குக் கொழும்பில் பலத்த பாதுகாப்புக் கொடுத்துள்ளனர். அரசுக்குத் தெரியாமலா இவை எல்லாம் நடந்தன? எனச் செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி வினவியபோது,
இக்கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காத அமைச்சர் மங்கள பாதுகாப்புப் பிரிவினருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். அப்படி ஒரு சிலர் தொடர்புபட்டிருக்கலாம் எனவும் இவ்விவகாரம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
உங்களுடைய பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. கருணா எங்கே இருக்கின்றார் என்பது தெரியாது என்கிறீர்கள். ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவருடன் பேச்சு நடத்துகிறார். அவர் பாதுகாப்பாகக் கொழும்பிலேயே இருக்கிறார் போலத் தோன்றுகின்றதே? என செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், உங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என நீங்களும் பாதுகாப்புக் கேட்டால் உங்களுக்கும் பாதுகாப்பு அளிப்போம். அது அரசின் கடமை என மழுப்பல் பதில் தந்தார் அமைச்சர் மங்கள.
சந்திரிகா தலைமையிலானவர்களால் பூரணமாக அறிந்திருந்த இந்தச் சதிநடவடிக்கையை மறைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் மீது முழுப்பழியையும் சுமத்தி தாங்கள் தப்பும் முயற்சிகளில் பொதுசன ஐக்கிய முன்னணி ஈடுபட்டுள்ளதனை உறுதிப்படுத்துவதாகவே அமைச்சர் மங்கள சமரவீராவின் கூற்றுக்கள் இருந்தன.
குறிப்பாக சனாதிபதி சந்திரிகாவின் கீழுள்ளவர்களின் நேரடிப்பங்கும் சந்திரிகாவின் நேரடிப்பங்கிற்கான சாத்தியமும் உள்ளதாகவே பெரும்பாலோனார்களால் பிரஸ்தாபிக்கப்படும் இவ்விவகாரத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை குற்றஞ்சுமத்த முனையும் மங்கள சமரவீராவின் கூற்றுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சந்திரிகா சார்ந்த பல உண்மைகளை வெளிப்படுத்த முனையலாம் எனத் தெரியவருகின்றது.
puthinam.com
-------------------------------
பாத்தியலோ ஆப்பிழுத்த குரங்குகளின் நிலையை மாறிமாறி ஒன்றைஒண்டு குற்றம் சாட்டி உண்மையச் சொல்லுதுகள்....! ஆனாப் பாருங்கோ இரண்டும் குரங்குதான்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>