06-25-2004, 10:03 AM
புலிகள் - படையினர் சந்திப்புக்களை தொடருமாறு அமெரிக்கா கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்புக்களை தொடருமாறு அமெரிக்கா கோரியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் இருதரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தடைப்படுவதற்கு காரணியாக அமைய விடவேண்டாம் என சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் கோரியுள்ளார்.
மீண்டும் யுத்தம் ஆரம்பிப்பதை இருதரப்பும் விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுடன் பேசவேண்டிய அவசியத்தையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
நேரடிப் பேச்சுக்கள் முலமே சமாதானத்தை அடையமுடியும் என்ற உண்மையை அமெரிக்க அரசு சிறிலங்காவின் ஆளும் அரசு, எதிர்க்கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>