06-25-2004, 02:13 AM
சிறீலங்கா இராணுவம் கருணாவுக்கு உதவவில்லை, மீண்டும் முரண்படுகிறார் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்
சிறீலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்னசிறீ விக்கிரமநாயக்க இன்று கருத்துக் கூறுகையில், கருணாவுக்கு சிறீலங்கா இராணுவம் உதவியதென்று வந்த செய்தியை மீண்டும் மறுத்துள்ளார்.
கொழும்பு இராணுவ மருத்துவமனையைச் சுற்றிப் பார்க்கச் சென்ற பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், அதன் முடிவில் நிருபர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
கடந்த இரண்டரை வருடங்களாக யுத்த நிறுத்தம் அமுலிலிருந்தாலும், சிறீலங்கா பாதுகாப்புப் படையினரின் போரிடும் சக்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அவர்கள் மிகவும் பலமான இராணுவப் போர்ப் பலத்துடனேயே தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள். தற்போது அனைத்துப் பாதுகாப்புப் படையினரும் உசார் நிலையிலேயே உள்ளனர் என்று குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவுக்கு சிறீலங்கா அரசு உதவியமை குறித்து வினவப்பட்டபோது, தற்போதைய அரசிலும் பாதுகாப்புப் படைகள் மீதும் அபகீர்த்தியை உண்டுபண்ணுவதற்காக சில அநாமதேய சக்திகள் இந்த விசமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமது அரசோ, இராணுவமோ எதுவிதத்திலும் கருணா குழுவுக்கு இதுவரை உதவவில்லை என்றும் குறிப்பிட்டு, அக்குற்றச்சாட்டை நிராகரித்தார்.
கருணாவுக்கு அரசு உதவியது என்ற குற்றச்சாட்டை முதலில் ஜனாதிபதி சந்திரிகா நிராகரித்திருந்ததும், பின்னர் பாதுகாப்பு செயலாளரும் அரச பேச்சாளருமான சிரில் ஹேரத் மறுதலித்திருந்ததும் அறிந்ததே.
திடீரென ஐ.தே.மு. உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தான் கருணாவுக்கு உதவியதையும், அவரைக் கொழும்புக்கு அழைத்து வந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்ததையும் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, ஆளும் ஐ.ம.சு.மு. அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர, அரசு கருணா தப்பிப்பதற்கு உதவியதையும், இராணுவத்தின் பாதுகாப்பையும் ஒத்துக் கொண்டார்.
ஆளும் கட்சியின் இன்னுமொரு அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தனக்கு கருணாவுடன் உள்ள தினசரி நேரடித் தொடர்பையும் சர்வதேச ஊடகத்திடம் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார்.
எனினும், ஆளும் கட்சியின் இன்னுமொரு அமைச்சரான ரத்னசிறீ விக்கிரமநாயக்க இன்று அதே கருத்தை மீண்டும் நிராகரித்துள்ளார்.
இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை ஆளும் கட்சியின் அமைச்சர்கள் வெளியிட்டு வருகையில், ஜனாதிபதியும் பிரதமரும் மௌனம் சாதிப்பது, பலத்த சந்தேகத்தையே கிழப்பியுள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>