06-25-2004, 02:11 AM
கருணாவிற்கு இராணுவம் ஆதரவு வழங்கியது உண்மையே - மங்கள சமரவீர
கருணா தப்பி ஒளிந்திருப்பதற்கும், அவர் விடுதலைப்புலிகளிற்கு எதிரான கபடத்தனமான யுத்தத்தில் ஈடுபடவும் இராணுவத்தினர் உதவியிருக்கிறார்கள் என்பதை சிறிலங்கா தகவற்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஒத்துக் கொண்டுள்ளார்.
இன்று பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்விவகாரத்தை ஒத்துக் கொண்டுள்ள மங்கள சமரவீர, சமாதானத்தில் நாட்டமில்லாத இராணுவத்தின் ஒரு பிரிவே இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் எனவும், ஆனால் இது குறித்த விடயம் தற்போதைய அரசிற்குத் தெரியாமலே இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை கருணா பற்றிய எந்த விவகாரத்திலும் தாங்கள் தலையிடவில்லையென சிறிலங்கா அரசு சாதித்து வந்தது. குறிப்பாக, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் சிறில் ஹரத் இவ்விவகாரத்தை முற்றாக மறுத்ததுடன் சிறிலங்கா அரசாங்கம் கருணாவிற்கு உதவியது என்ற சந்தேகம் இருந்தால் விடுதலைப்புலிகள் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கடந்த திங்கட்கிழமை காட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிறிலங்காவின் முக்கிய அமைச்சராலேயே கருணா விவகாரத்தில் சிறிலங்காவின் பங்கு ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளதானது சிறிலங்காவின் சமாதானத்தின் மீதான அக்கறை குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளதுடன் இவ்விவகாரம் பூதாகரமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் இராணுவம் மாத்திரமல்லாமல் இவ்விவகாரத்தில் அதன் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா மற்றும் புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில கந்தவிதான ஆகியோரின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் பல முக்கியஸ்தர்கள் இவ்விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அவர்களினைக் காக்கும் ஒரு முயற்சியாகவே அமைச்சர் மங்கள சமரவீர இவ்விவகாரத்தை ஒத்துக் கொண்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>