07-10-2003, 08:59 PM
kuruvikal Wrote:அது சரி உங்களின் காதலன்களின் எண்ணிக்கையோடும் ஓடுவதோடும் உங்கள் வாழ்க்கையை ஓட்டுங்கள் யார் வேண்டாம் என்றார்.....பின்னர் மாஜி முன்னாள் Ex காதலன்கள் என்று அடை மொழி போட்டு வைத்துக் கொண்டு வாழ்வீர்கள் அதெல்லாம் கொஞ்சம் என்றாலும் மனித நாகரிகம் உள்ளவர்களுக்கு தேவையில்லை!.
குருவிகள்
யோசித்தான் பதில் எழுதுகிறீர்களா?
ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கும் போது அவளுக்கு இன்னொருவனைக் கல்யாணம் செய்து வைக்க
பெற்றோர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தத்தளித்து அல்லது
சொல்லியும் பெற்றோர் கேளாது போக
இறுதியில் ஒரு முடிவு எடுத்து காதலனிடம் போய்ச் சேர்ந்தாள்.
இதற்கும் காதலனின் எண்ணிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா.
அவள் ஒருவனைக் காதலித்து இன்னொருவனைக் கைப்பிடித்தாளாயிருந்தால் உங்கள் கருத்து ஓரளவாவது பொருந்தும்.
சும்மா ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எழுதுவது போல இருக்கிறது உங்கள் கருத்து .
nadpudan
alai
alai

