06-24-2004, 11:57 AM
<span style='font-size:25pt;line-height:100%'>போலி ஆவணங்களைத் தயாரித்துவந்த
மினி கச்சேரி அரியாலையில் முற்றுகை!</span>
பெருந்தொகை சான்றிதழ்களுடன் மோசடிப் பேர்வழி கைது!
போலியான ஆவணங்கள், சான்றிதழ்களைத் தயாரித்து வழங்கி வந்தவர் என்று கூறப்படும் மோசடிப் பேர்வழி ஒரு வரை யாழ். பொலீஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்றக் கைதுசெய்திருக்கின்றனர்.
அரியாலைப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட்ட பொலீஸார் அங்கிருந்து பெருந்தொகையான போலி ஆவணங்கள், சான் றிதழ்கள் மற்றும் இறப்பர் முத்திரைகள் என்பவற்றை மீட்டெடுத்திருக் கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் போலி ஆவணங்களைத் தயாரித்து விநியோ கிக்கும் மோசடியில் சுமார் 14 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டுவந்தவர் என்ற அதிர்ச்சித் தகவலையும் பொலீஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
போலியாகத் தயாரிக்கப்பட்ட அரச உயர் அதிகாரிக ளின் உத்தியோ கபூர்வ காகிதத் தலைப்புக்கள், அரச முத்திரையிடப்பட்ட - பூர்த்தி செய் யப்படாத - படிவங்கள், திணைக்களங்கள், சுகாதார அதிகாரிகள், கல்வித் துறை நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் கடிதத் தலைப்புக்கள், ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பனவும் இறப்பர் முத்திரைகளும் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
யாழ். ஆஸ்பத்திரி மற்றும் நீதிமன்றங்களின் ஆவணங் களும், சமாதான நீதிவான்கள், கிராம அலுவலர்கள் போன் றோரால் விநியோகிக்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள், வர்த்தக நிறு வனங்களின் சிட்டைகள் என்வற்றை யும் அந்த நபரிடமிருந்து பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
பல்கலைக்கழக வெளிவாரிப் பாPட்சை சான்றிதழ்கள், பாPட்சைகள் திணைக்கள சான்றிதழ்கள், வாகன அனுமதிப்பத்திரங்கள் என்பனவும் மீட் கப்பட்ட போலி ஆவணங்களில் அடங் கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வளவு தொகையான போலி ஆவணங்கள் ஒன்றாக, ஒரே இடத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது குடாநாட்டில் இதுவே முதல் முறை என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கைதுசெய்யப்பட்ட ஆறுமுகம் ஜோசப் சில்வானஸ் என்பவர் தனது இல்லத்தை போலி ஆவணங்களை விநியோகிக்கும் ஒரு ஷமினி கச்சேரி| போன்று நடத்திவந்திருப்பதும் விசார ணைகள் மூலம் தெரியவந்திருக்கிறது.
குற்றச்செயல் ஒன்றுடன் தொடர் புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரைப் பிணை எடுப்பதற்காக சான் றிதழ் ஒன்றில் ஒப்பம் பெறுவதற்காக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு வந்த நபர் ஒருவர் வைத்திருந்த ஆவ ணத்தில் எழுந்த சந்தேகமே இந்தப் பெரும் மோசடிச் செயலை அம்பலப் படுத்தியிருக்கின்றது.
பிரஸ்தாப நபர் வைத்திருந்த ஆவ ணத்தைப் பார்வையிட்ட கிராம அலு வலர் ஒருவர் அது போலியானதாக இருக்கலாம் எனச் சந்தேகித்து உட னடியாகப் பொலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் என்றும் -
இதனையடுத்து பொலீஸார் அந்த நபரையும், சான்றிதழ்களில் ஒப்பம் பெறவந்த வேறு பலரையும் விசாரணை செய்தபோது இந்தப் போhலிச் சான் றிதழ் விநியோகிக்கும் மோசடி பற்றித் தெரியவந்தது எனவும் -
கூறப்படுகிறது.
இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலீஸார், அரி யாலை புங்கன் குளம் பகுதியில் மினி கச்சேரி| இயங்கிவந்த வீட்டை முற்றுகையிட்டு அந்த நபரைக் கைது செய்தனர்.
யாழ். பொலீஸ் நிலையப் பொறுப் பதிகாரி ஆனந்த செனிவிரத்னவின் பணிப்பின்பேரில் குற்றவியல் பிரிவுப் பொறுப்பதிகாரி எச்.எம்.விக்ரமரத்ன மற்றும் உதவிப் பொறுப்பதிகாரி விதா னகே ஆகியோர் தலைமையில் சென்ற பொலீஸ் குழுவே இந்த முற்றுகையை மேற்கொண்டது.
கைதுசெய்யப்பட்ட நபர் நேற்று மாலை யாழ். நீதிமன்றில் ஆஜர் செய் யப்பட்டார். அவரை அடுத்த மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த நபருக்கு போலி இறப்பர் முத்திரைகளைத் தயாரித்து வழங்கி யவர் எனக் கூறப்படும் மற்றொரு நப ரான தில்லையம்பலம் செல்வராசா என்பவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
http://www.uthayan.com/news/newsmain.htm

Truth 'll prevail