07-10-2003, 06:20 PM
பேசாமல் இப்படி ஏதாவது எழுதினால் இந்தப் பக்கத்துக்குப் பொருத்தமாக இருக்குமோ?
வெள்ளைப்பணியாரம்
அரைகிலோ பச்சையரிசி, 200 கிராம் உளுந்து, 50 கிராம் வெந்தயம் ஆகிய மூன்றையும் கலந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.
பின்னர் இவற்றைக் கெட்டியாக அரைத்து ஒரு தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மா புளிக்க வேண்டும் என்று அவசியமில்லை உடனேயே பணியாரம் தயாரிக்கலாம்.
சட்டியில் எண்ணைவிட்டு சூடாக்கவும்; . கரண்டியினால் மாவை எடுத்து சூடான எண்ணையில் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கத்தை வேகவிடவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னி நல்லதாக இருக்கும்.
வெங்காய சட்னி செய்யும் முறை இதோ,
அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அளவான கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து, அதில் இரண்டு பெரிய (சிறிதுசிறிதாக வெட்டிய) வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, புளி, இரண்டு மேசைக் கரண்டி தேங்காய்ப்புூ சேர்த்து அரைத்துக் கொண்டால் வெங்காய சட்னி தயார்.