06-23-2004, 04:43 PM
(மேலதிக செய்தி இணைப்பு)
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அலிசாஹிர் மௌலானா தமது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளினால் நீக்கப்பட்ட கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இந்த தீர்மானத்தை தாம் எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் அறிவித்திருக்கின்றார்.
மனிதாபிமான அடிப்படையிலேயே கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்ததாகவும், அது குறித்து தமது கட்சிக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறு எனினும் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்ததன் பின்னர் பாதுகாப்பு பிரிவினர் நடந்து கொண்ட முறையை தம்மால் கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இன்று யூன் 23 ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், தங்களது உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா விடுதலைப் புலிகளால் நீக்கப்பட்ட கருணாவை கொழும்புக்கு அழைத்து வர உதவிய விடயம், தங்களது கட்சியின் தலைமைப் பீடத்திற்கோ அல்லது வேறு எந்தவொரு உறுப்பினருக்குமோ தெரியப்படுத்தப்படவில்லை என்றும், இந்த விடயத்தில் அலிசாஹிர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையின் நிலைப்பாடு என்னவெனில், விடுதலைப் புலிகளால் நீக்கப்பட்ட கருணா குறித்த விடயம் அவ்வமைப்பின் உள் விவகாரம் என்பதே. அதனால் அந்த அமைப்பே அதுகுறித்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கருதுகிறது எமது கட்சி. ஆட்சியிலிருந்த போதும் எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் எமது கட்சியின் கருத்து இதுவாகவே உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர், அரசும் விடுதலைப் புலிகளும் நேரடியாகப் பேசி சமாதான முன்னெடுப்புக்களைத் தொடரவேண்டுமென்பதே ஐ.தே.முன்னணியின் கொள்கையாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>