06-23-2004, 04:37 PM
ஈழவேந்தன் எம்.பி.யினால் தர்மசங்கடமடைந்த தலைவர்கள் (எஸ்.ஸ்ரீகஜன்)
பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி எதிரணியினர் திங்களன்று சபாநாயகரிடம் மகஜரைக் கையளிக்கமுன்னரும், பின்னரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்ட எம்.கே. ஈழவேந்தன் தெரிவித்த கருத்துக்களை ஏனையகட்சித் தலைவர்கள் மொழிபெயர்த்து அறிந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
தம்மை ஈழவேந்தன் எம்.பி.ஏதாவது தர்மசங்கடத்தில் மாட்டி விடுவாரோ என்று ஏனைய கட்சித் தலைவர்கள் தடுமாற்றத்துக்குள்ளானமையையும் காணக்கூடியதாக இருந்தது.
பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் மகஜர் கையளித்த பின்னர் செய்தியாளர் மாநாடொன்றினை கூட்டாக நடத்தின.
இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எம்.பி.க்களான கருஜயசூரியா, ஜி.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க ஆகியோரும் ஏனைய கட்சிகளின் சார்பில் எம்.பி.க்களான பெ.சந்திரசேகரன், எம்.எஸ்.செல்லச்சாமி, எம்.கே.ஈழவேந்தன், ரவூப் ஹக்கீம், அத்துரலிய ரத்னதேரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் மாநாட்டில் கருஜயசூரிய கருத்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்பதற்கு அவர் நேரத்தை ஒதுக்கினார்.இரு கேள்விகள் கேட்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இதில் கலந்து கொண்ட ஈழவேந்தன் எம்.பி. தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இதற்கான சந்தர்ப்பத்தினை கருஜெயசூரியா வழங்கினார்.
ஈழவேந்தன் எம்.பி.தனது கருத்தை தமிழில் கூறத் தொடங்கியதும், ஹெல உறுமயவின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் எம்.பி.யுமான அத்துரலிய ரத்னதேரர் கருஜயசூரியாவிடம் ஏதோ கேட்டார். அதன் பின் ஈழவேந்தன் பேசும் விடயத்தினை அருகில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கேட்டறிந்த கருஜயசூரிய அத்துரலிய ரத்ன தேரருக்கு சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கூறிக்கொண்டிருந்தார்.
ஈழவேந்தன் எம்.பி. எதனையாவது பேசி தம்மை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிடுவாரோ என்ற அச்சத்தாலேயே அவரது உரையை ஜாதிக ஹெல உறுமயவின் தேரர் மொழிபெயர்த்து அறிந்து கொண்டமை நன்கு புலப்பட்டது.
இதேபோல், மகஜர் கையளிக்க முன்னரும் சபாநாயகரிடம் ஈழவேந்தன் எம்.பி. கூட்டமைப்பின் சார்பில் தமிழில் கருத்துக் கூறினார். இதனை மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரன் மூலமாக மொழிபெயர்த்து ஐ.தே.க வின் எம்.பி. மகிந்த சமரசிங்க அறிந்து கொண்டதைக்காணக் கூடியதாக இருந்தது.
Source: Virakesari

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>