06-23-2004, 02:35 PM
புலிகள் மீதான தடை தொடரும்: அமெரிக்கா
வாஷிங்டன்:
தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்க மாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கிரிஸ்டினா ரோக்கா அந் நாட்டு நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக் கூட்டத்தில் பேசுகையில்,
தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பட்டியலில் இருந்து இப்போது புலிகளை நீக்க மாட்டோம்.
தீவிரவாதத்தை ஒரு கொள்கையாக வைத்திருக்க மாட்டோம் என அவர்கள் அறிவிக்காதவரை, சிறார்களை படையில் சேர்ப்பதை அவர்கள் நிறுத்தாதவரை புலிகள் மீதான தடையை நீக்க மாட்டோம்.
புலிகள், இலங்கை அரசுக்கு இடையே ஆகஸ்ட் மாதத்துக்கு முன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் மிகச் சிறப்பான பணியை ஆற்றி வருகிறது நார்வே நாடு.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் இலஙகை அரசு தீவிரமாக இருப்பதாகவே கருதுகிறேன். அதே நேரத்தில் புலிகளின் தலைமையில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தனி நிர்வாகம் அமைய அதிபர் சந்திரிகா விரும்பவில்லை.
இவ்வாறு கிரிஸ்டினா ரோக்கா கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் இயக்கம் போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது....!
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>