06-23-2004, 02:02 PM
சிங்கள அரசிடம் மாதாந்தம் ஐந்தரைக்கோடியும், ஆயுதங்களும் கேட்ட கருணா!
இலங்கை அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டு பேசுவதை நாம் அனுமதிக்க முடியாது. முதலில் போரா, சமாதானமா என்பதை தீர்மானிக்கவேண்டும். அதுவரை இராணுவத்துடனான மாதாந்த சந்திப்பை நிறுத்தி இருக்கிறோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ரமணன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்தின் இன்றையநிலை தொடர்பான விழிப்புணர்ச்சிக் கருத்தரங்கு நேற்றுமுன்தினம் நாவிதனவெளி அனனமலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், கிழக்கிலிருந்து கொழும்பு சென்ற கருணா அணியினர் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் கபில கந்தவிதானவிடம் சில கோரிககைகளை விடுத்தனர்.
தமக்கு மாதம் ஐந்தரைக் கோடி ரூபா தரவேண்டும். கொக்கட்டிச் சோலை போன்ற பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்கப்படல் வேண்டும். மட்டுநகர் பகுதிகளில் தாம் ஆயுதத்துடன் நடமாட அனுமதிக்க வேண்டும். போதுமான ஆயுதஙகளும் தர வேண்டும போன்ற பல கோரிக்கைகளை விடுத்தனர்.
அதற்கு மட்டு.நகரில் ஆயுதத்துடன் நடமாட மட்டுமே என்னால் அனுமதியளிக்கமுடியும். ஏனைய கோரிக்கைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேசிக் கொள்ளுங்கள் என்று புலனாய்வுப் பணிப்பாளர் கபில கந்தவிதான கருணாவிடம் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் .புலிகளுடன் பேசியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அரசுக்கு இருப்பதால் இராணுவ முகாம்களை மேலும் அமைக்க முடியாது என்றும் கபில கந்தவிதான கருணாவிடம் கூறி இருந்தார்.
தலைவரின் நேரடிப் பார்வை இன்று வடக்கு - கிழக்கில் உள்ளது. எத்தனை ஆயிரம் படைகள் வந்தா லும் இந்த மண்ணைவிட்டுப் போக மாட்டோம். எனவே, எமது படைப்பலத்தைப் பெருக்க வேண்டிய நிலையும் உள்ளது. அரசியல் மற்றும் படைப்பலப் போராட்டம் மூலம் நாம் இழந்த இடங்களை மீளப்பெறமுடியும். பேச்சுக்கள் மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மூலமாவது எமது உரிமைகள் பெறப்படும். எமது தலைவருக்கு மற்றுமொரு போரில் நாட்டமில்லை எனவும் தெரிவித்ததோடு,
எனது 19 வருட போராட்ட வரலாற்றில் ஆக மூன்றே மூன்று தரம் தலைவரைச் சந்தித்திருக்கிறேன். போராட்டக் காலத்தில் பல துன்பங்களைச் சந்தித்திருக்கிறோம். இந்திய அமைதிப்படை வந்தகாலத்தில் பல நாள்கள் உணவின்றி பட்டினி கிடந்திருக்கிறோம். கனவிலே சோற்றைக் கண்டு நிஜத்திலே கஞ்சியைக் குடித்திருக்கிறோம். ஆனால், நாம் இயக்கத்தைவிட்டு ஓடவில்லை என்று ரமணன் மேலும் தெரிவித்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>