06-23-2004, 01:57 PM
முதுகில் குத்திய ரணில்
பதிவு செய்தவர் Mohan காலம் June 23, 2004
கிழக்கில் பல குழப்பங்களுக்குக் காரணமான கருணா இராணுவப் பாதுகாப்பில்தான் இருந்தார், இருக்கிறார் என்பது பற்றிய முழு விவரங்களும் அம்பலமாகிவிட்டன. இந்த அரசும் இராணுவமும் கருணா விடயத்தில் நடந்து கொண்டவிதம் அம்பலமாகியிருப்பது மட்டுமல்ல, அதற்கும் அப்பால், சிங்களப் பேரினவாதக் கட்சிகள் அனைத்துமே இந்த விடயத்தைப் பயன்படுத்தித் தமிழர் போராட்ட சக்தியையே மழுங்கடிக்க முயன்றிருப்பது பரகசியமாகியிருப்பதுதான் அதிர்ச்சி தரும் புதுவிடயம்.
ஐ.ம.சு. கூட்டமைப்பு அரசும் அந்த அரசின் கீழ் இயங்கிய இராணுவமும் கருணா விடயத்தில் இப்படி நடப்பதில் புதுமை ஒன்றும் இல்லை. அவை இப்படித்தான் நடக்கும், நடந்திருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் இந்தப் பிந்திய சமாதான முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபடுபவராக வெளியுலகிற்குத் தன்னைக் காட்டிக்கொண்டு, தலைவர் பிரபாகரனுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை அரசுத் தரப்பில் கையொப்பமிட்ட ஐ.தே. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புத்தான் தமிழர் தரப்பை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.
சிங்களத் தரப்பில் ரணில் விக்கிரமசிங்கதான் ஓரளவு மிதவாதத் தலைவர், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை அங்கீகரிக்கக் கூடிய மனப்போக்குடையவர், இனப் பிரச்சினைக்கு யுத்தத்தை விடுத்து சமாதான வழியில் தீர்வு காண விரும்புபவர், இராணுவத் தீர்வுப் போக்கில் நாட்டம் கொள்ளாதவர் என்றெல்லாம் தமிழர்கள் தரப்பில் நிலவிய ஒரு கருத்து தப்பு என்பதைக் கருணா விடயம் ஊர்ஜிதப் படுத்தியிருக்கின்றது.
மட்டக்களப்பை விட்டு கருணா தப்பியோடியதற்கு உதவி செய்தவர் ரணிலின் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த தேசியப்பட்டியல் எம்.பியான அலி சாஹிர் மௌலானாதான். அதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். கருணா பால்ய நண்பர் என்றதால் அதைத் தாம் செய்தார் எனக் குறிப்பிட்டு, தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் சப்புக்கட்டுக் காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். தனிப்பட்ட ஆளாக - தனிப்பட்ட ஓர் எம்.பி. என்ற முறையில் - அலி சாஹிர் மௌலானா இந்த வேலையைச் செய்திருந்தார் என்றால் அது வேறு விடயம். ஆனால், கட்சித் தலைவர் ரணிலின் ஆசீர்வாதத்துடனும் ஒப்புதலுடனும் இந்த விடயத்தில் அவர் செயற்பட்டார் என்ற தகவல் கசிந்திருப்பதுதான் தமிழர் தரப்பை அதிர்ச்சிக்குள்ளும் எரிச்சலுக்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றது.
இதனைப் புரிந்துகொள்வதற்கு ஏப்ரல் முதல் வாரங்களில் நடந்த சம்பவங்களை வாசகர்கள் நினைவு கூர்வது நல்லது. பொதுத் தேர்தல் நடந்தது ஏப்ரல் 2இல். அதில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களில் நால்வர் கருணாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்ற செய்தி அப்போது வெளியாகியிருந்தது. ஏப்ரல் 7,8ஆம் திகதிகளில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் வீட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டத்தில் பங்குபற்ற வந்த மேற்படி எம்.பிக்கள் நால்வரும் தொடர்ந்து கொழும்பில் தங்க விடப்படாமல், பாதுகாப்புக்காக வந்த படையினரால் பலவந்தமாகக் கூட்டிக்செல்லப்பட்டனர்.
ஐ.தே.கட்சியும், ஐ.ம.சு. கூட்டமைப்பும் தமது தேசியப் பட்டியல் எம்.பிக்களின் விவரத்தை ஏப்ரல் 9ஆம் திகதியளவில் தேர்தல் ஆணையாளருக்குச் சமர்ப்பித்தன.
கிழக்கில் கருணா குழு மீதான தாக்குதலை ஏப்ரல் 10 இல் புலிகள் ஆரம்பித்தனர்.
ஏப்ரல் 11 இல் கருணா தனது குழுவினருடன் கிழக்கிலிருந்து கொழும்புக்குத் தப்பி ஓடினார்.
- இவைதான் நடந்து முடிந்த சம்பவங்களின் வரிசை.
இங்குதான் அலி சாஹிர் மௌலானாவின் பங்களிப்பும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணிலின் தொடர்பும் சங்கமிக்கின்றன. கருணா தன் வழிகாட்டலில் இருப்பதையும் அவரின் கீழ் இயங்கக்கூடிய நெருக்குதலில் உள்ள நான்கு எம்.பிக்களையும் தாம் தமது வழிப்படுத்தலில் வைத்திருக்கின்றார் என்பதையும் அலி சாஹிர் மௌலானா கட்சித் தலைவர் ரணிலுக்கு அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் எனத் தெரிகின்றது. கருணாவையும் அவருக்குக் கீழ் இயங்கக் கூடிய நான்கு எம்.பிக்களையும் தன்வசம் வைத்திருக்கும் தனது கட்சிக்காரரை - தனது ஆளைச் சரியாகப் பயன்படுத்த முயன்றார் ரணில். அதேபோன்று கருணாவைக் காட்டி தனது பலத்தை ரணிலுக்கு வெளிப்படுத்த முயன்றார் அலி சாஹிர் மௌலானா.
விளைவு....?
கட்சியின் மூத்த உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் திலக் மாரப்பன, டிரோன் பெர்னாண்டோ, ஏ.எச்.எம். அஸ்வர் போன்றோருக்குக்கூட தேசியப்பட்டியல் எம்.பி. பதவியில் இடமளிக்க முடியாத ரணில், அலி சாஹிர் மௌலானாவுக்கு வளைந்து கொடுத்தது இதனால்தான். கொழும்பில் ஏப்ரல் 7,8ஆம் திகதிகளில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டத்திலிருந்து மட்டக்களப்பின் நான்கு எம்.பிக்களைக் கூட்டிச் சென்ற பாதுகாப்புப் படையினர் கூட அலி சாஹிர் மௌலானாவின் வழிநடத்தலிலேயே அப்போது செயற்பட்டனர் எனத் தெரிகின்றது. கொழும்புக்குத் தப்பி ஓடி வந்த கருணா குழுவை நான்கு நாள்கள் தனது வழிநடத்துதலில் வைத்திருந்துவிட்டு அவரை இராணுவத்திடம் ஒப்படைத்தவரும் இதே அலி சாஹிர் மௌலானாதான். கருணாவையும் நான்கு எம்.பிக்களையும் காட்டி அலி சாஹிர் மௌலானா எம்.பி. பதவியைச் சுருட்டிக் கொண்டார். கருணாவையும் நான்கு எம்.பிக்களையும் கையில் போடுவதற்காக அலி சாஹிர் மௌலானாவுக்கு அப்பதவியை வழங்கி அடங்கிப் போனார் ரணில் ஆனால், தேசியப் பட்டியல் எம்.பி. பதவிக்கு அலி சாஹிர் மௌலானா உட்பட ஐ.தே.கட்சிப் பிரமுகர்களின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் கதை தலைகீழாகி விட்டது வேறு விடயம். அடுத்த ஓரிரு நாள்களில் கருணா மட்டக்களப்பை விட்டே ஓடித்தப்பும் நிலை ஏற்பட்டது. என்றாலும் கருணாவைத் தம் பக்கம் பயன்படுத்த ரணில் முயன்றார் என்பது தமிழர்கள் மனதை நெருடும் விடயம்தான்.
நன்றி: உதயன் 23.06.04 & yarl.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>