06-23-2004, 01:16 PM
<b> ஜனாதிபதி சந்திரிகா கூட்டணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ரவுூப் ஹக்கீம் மீண்டும் முரண்பாடான அறிவிப்பு </b>
[ காவலு}ர் கவிதன் ] [ செவ்வாய்க்கிழமை, 22 யுூன் 2004, 21:40 ஈழம் ]
சிறீலங்கா வாழ் மக்கள் ஜனாதிபதி சந்திரிகா கூட்டணியின் ஆட்சியை தேர்தலில் அங்கீகரித்திருப்பதனால், அவர்களுக்கு தமது கட்சியின் ஆதரவைக் கொடுப்பது தவறில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்திலிருந்து தமது கட்சியின் ஆதரவு ஐ.தே.முன்னணிக்கே என்று தெரிவித்து வந்தாலும், இடையிடையே ஐ.ம.சு.முன்னணிக்கும் தனது ஆதரவை சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வழங்கவுள்ளதாகவும் ரவுூப் ஹக்கீம் அவ்வப்போது தெரிவித்து வந்தார்.
சில வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை ஐ.ம.சு.மு. கட்சிக்கு வழங்கிவரும் நிலையில், ரவுூப் ஹக்கீம் தனது ஆதரவை அதே கட்சிக்கு வழங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது தவிர, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரவுூப் ஹக்கீம் மீது மிக மோசமான பாலியல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியபோது, அக்குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதற்குக் காரணமாக இருந்தவர் ஜனாதிபதி சந்திரிகாவே என்று ஹக்கீம் பகிரங்கமாக ஜனாதிபதியைச் சாடியிருந்தார்.
சென்ற வாரம் ஐக்கிய தேசிய முன்னணி உட்பட, ஆளும் கட்சி தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் இணைந்து சபாநாயகருக்கு பாராளுமன்ற ஒழுங்காற்று நிலை குறித்த மகஐரொன்றைக் கையளித்தபோது, ரவுூப் ஹக்கீமும் அதிலே ஆளும் கட்சிக்கெதிராகக் கையொப்பமிட்டிருந்தார்.
இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐ.ம.சு.முன்னணிக்கு தனது ஆதரவை வழங்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், வழமைபோன்று ரவுூப் ஹக்கீம் மீண்டும் தனது கருத்தை சில நாட்களுக்குள் மாற்றிக்கொண்டு, தனது கட்சியின் ஆதரவை ஆளும் சந்திரிகா கூட்டணிக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் வெளியாகும் சிங்கள தினசரிகள் சில, ரவுூப் ஹக்கீமின் இத்தகைய முரண்பாடான நடவடிக்கைகள், முடிவுகள் குறித்து காரசாரமாக விமர்சித்திருப்பதுடன், கேலிச் சித்திரங்களும் தீட்டியுள்ளன.
நன்றி புதினம்