07-10-2003, 11:34 AM
எமது தேசம் தனியான ஒரு நாடு என்பதனைக் காவல்துறை நிர்வாகக் கட்டமைப்பு அரசியல் hPதியில் பறைசாற்றியுள்ளது. இவ்வாறு புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளார். மாங்குளத்தில் அண்மையில் உரையாற்றிய அவர் அங்கு மேலும் கூறுகையில், இந்த தீவில் இரண்டு இனங்கள்,இரண்டு தேசங்கள் இரண்டு ஆட்சி பீடங்கள் இருக்கின்றன. இதற்கு புலிகளின் காவல்துறை நல்லதொரு சான்றாகும். தமிழீழம் என்பது வேறுசிறீலங்கா என்பது வேறு இது வெளிப்படையானது. சிறீலங்கா அரசு எமக்கு நீதியான நியாயமான தீர்வினை வழங்கும் என்று நாம் எதிர்பார்த்து இருக்கவில்லை. போராடியே எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நிலைக்கு அரசாங்கம் எம்மைத் தள்ளுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

